Close
நவம்பர் 22, 2024 5:14 மணி

பெருந்துறையில் 2 மேம்பாலங்கள் 3 அணுகு சாலைகள் அமைக்க அனுமதி…

ஈரோடு

பெருந்துறை ஒன்றிய திமுக சார்பில் எம்பி சுப்பராயனுக்கு நடைபெற்ற பாராட்டு விழா

பெருந்துறையில் ரூ. 92.60 கோடி செலவில் ரெண்டு மேம்பாலங் களும் 3 அணுகு சாலைகளும் அமைப்பதற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டத் தை நிறைவேற்றுவதற்காக பாடுபட்ட திருப்பூர் எம்பி சுப்பராயனுக்கு பெருந்துறையில் பாராட்டு விழா நடைபெற்றது.

பெருந்துறை அருகே (என்.எச்- 544) சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.92.60 கோடி மதிப்பில் துடுப்பதி, காஞ்சிக்கோயில் சாலை சந்திப்புகளில் இரண்டு மேம்பா லங்களும், பெத்தம்பாளையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் அணுகு (சர்வீஸ்) சாலைகளும் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்திற்காக அரசு மற்றும் இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையத்திடம் (என்ஹெச்ஏஐ) பல மனுக்கள் அளித்து, திட்டம் நிறைவேற முயற்சி எடுத்ததற்காக, திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயனுக்கு பெருந்துறையில் திமுக ஒன்றியச் செயலாளர் கே.பி.சாமி தலைமையில் பாராட்டு விழா நடந்தது.

மொத்தம் ரூ.92.60 கோடி மதிப்பீட்டில் 2 மேம்பாலங்களும், பெத்தாம்பாளையம் சாலை, விஜயமங்கலம்-வாய்ப்பாடி சாலை சந்திப்புகளில் சர்வீஸ் சாலைகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக எம்.பி. சுப்பராயனை பாராட்டினார்.

இந்த நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற விபத்துகளில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந்த இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இத்தொகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பல ஆண்டு கோரிக்கை தற்போது திருப்பூர் தொகுதி எம்.பி. சுப்பராயனின் முயற்சியால் மேம்பாலங்கள் மற்றும் , அணுகு சாலைகள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

2019 முதல் இத்திட்டத்தைப் பெற முயற்சித்து சுப்பராயன் வெற்றி பெற்றார். அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை கூட பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த முதல்வர் கருணாநிதி யை சந்தித்து சுப்பராயன், அப்போதைய எம்எல்ஏ க்கள் பெரியசாமி, ராஜ்குமார் மன்றாடியார் ஆகியோர் முன் வைத்தனர் என்றார் கே.பி. சாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலர் எஸ்.சின்னசாமி வரவேற்றார். எம்பி சுப்பராயன் திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top