Close
செப்டம்பர் 20, 2024 6:58 காலை

ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில்  விநாயகர் சதுர்த்தி விற்பனை கண்காட்சி தொடக்கம்

ஈரோடு

ஈரோடு பூம்புகார் நிலையத்தில் தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விற்பனை கண்காட்சி

ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்  விநாயகர் சதுர்த்தி கண்காட்சி விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மேலாளர் சரவணன் கூறியதாவது:  செப் 8 முதல்  18 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சியில், பஞ்சலோகம், பித்தளை, பேப்பர் கூழ், மண், வெள்ளெருக்கு வேர், மார்பிள் பவுடர், மாவுக்கல், கருங்கல் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் உள்ளன. தவிர வெண் மரம், நுாக்க மரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகர், தஞ்சாவூர் ஓயவிம், கலை தட்டுக்களில் செய்யப்பட்ட விநாயகர் உருவம், பல்வேறு வகை வண்ண வடிவங்களிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு விதை விநாயகர், மயில் விநாயகர், நந்தி விநாயகர், ஆதியந்த பிரபு, நடன விநாயகர், மியூசிக் விநாயகர் போன்றவை புதிதாக வந்துள்ளன. 100 ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிலைகள் உள்ளன. குறிப்பிட்ட சிலைகளுக்கு, 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பூம்புகார் பற்றி…

தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (TNHDC) கடந்த   1973 -ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. “பூம்புகார்”  நிறுவனத் தயாரிப்புகள் நேர்த்தியாகவும், அழகாகவும் சாதாரண விலையில் கிடைக்க கூடியதாகவும் உள்ளது. கைத்திறப் பொருட்கள் கவனமாக கையால் வடிவமைக்கப்பட்டு,வாடிக்கையாளர்களுக்காகசந்தைப்படுத் தப்படுகின்றது.

வெண்கலம், பித்தளை, செம்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்ட பல்வேறு வடிவங்களி னாலான பஞ்சலோக சிலைகள் உள்ளன. மேலும் தஞ்சை ஓவியங்கள், தஞ்சாவூர் கலை தட்டுப் பொருட்கள், வெள்ளை உலோகத்தினாலான பொருட்கள், கருப்பு உலோகத்தினாலான பொருட்கள், மர சிற்பங்கள், கற்சிற்பங்கள், மர வேலைப்படுகள், கல் வேலைப்படுகள், தோல், சணல் மற்றும் களிமண்ணால் ஆன பொருட்கள், சுவாமிமலை பஞ்சலோகசிலைகள், கொண்டப்பள்ளி பொம்மைகள், மீனாகரி, கலம்கரி, சந்தனமாலைகள், போன்றவை உள்ளன.

பூம்புகார் நிறுவனம், சென்னை, சென்னை விமான நிலையம், வண்டலூர் உயிரியல் பூங்கா, ஐஐடி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகம், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சுவாமிமலை , புது டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகியவற்றில் அமைந்துள்ள 17 விற்பனை நிலையங்கள் மூலம் கைவினைஞர் களின் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.

மேலும்ஸ மாமல்லபுரம் (கற்சிற்ப உற்பத்தி நிலையம்), நாச்சியார்கோயில் (பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்கள் உற்பத்தி நிலையம்), மதுரை (பித்தளை விளக்குகள் மற்றும் பித்தளை கலை பொருட்கள் உற்பத்தி நிலையம்), வாகைக்குளம் (வெண்கல பொருட்கள் உற்பத்தி நிலையம்), சுவாமிமலை (உலோகசிற்ப உற்பத்தி நிலையம்), தஞ்சாவூர் (தஞ்சாவூர் கலை தட்டுகள்), கள்ளக்குறிச்சி (மரவேலைப்பாடுகள்). ஆகியவை பூம்புகாரின் 7 உற்பத்தி மையங்களாக உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top