தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச் சத்துமாதம் 2023 -ஐ முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச் சத்து மாத விழா 2023 -ஐ விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் (08.09.2023) தொடக்கி வைத்தார்.
இந்தவிழிப்புணர்வு பேரணியானது ரயில் நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபம் வரை சென்ற டைந்தது.
இப்பேரணியில் “ஊட்டச்சத்து மிக்க பாரதம், எழுத்தறிவு பெற்றபாரதம், வலிமையான பாரதம்”என்பதை அடிப்படை யாகக் கொண்டு அனைவருக்கும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்டதிட்ட அலுவலர் கை. ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.