தமிழகம் முழுவதும் மின்கலப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 -ஆம் தேதி முதல் நடக்க உள்ள மாநில அளவிலான இளையோர் தடகள போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் போட்டி (செப்.8) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அடுத்தடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் மின்கலப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள 685 காலி பணியி டங்களை நிரப்ப, ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு பணப் பலன்களை வழங்கு வதற்காக தமிழக முதல்வர் ரூ.1500 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளார். அதனைக் கொண்டு ஓய்வூதியதாரர்களுக்கு பணப் பலன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் 4, 5 மாதங்கள் மட்டுமே பாக்கி உள்ளது. அவர்களுக்கும் விரைவில் பணப் பலன்கள் வழங்கப்படும்.
மேலும், புறநகர் பேருந்தில் சீட் எண்ணிக்கை 5 குறைக்கப் பட்டுள்ளது. உடல் பருமனாக உள்ளவர்கள் பயணிக்கும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. பேருந்துகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்பது நீண்ட கால பிரச்சனை. அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடித்தள சட்டம் நல்லநிலையில் உள்ள பேருந்துகளில் 1,500 பேருந்து கள் தேர்வு செய்யப்பட்டு, அதனை புதிதாக கூடு கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.