Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

வீட்டுத்தோட்டம்… மணத்தக்காளி கீரை வளர்ப்பு..!

அயலகத்தமிழர்கள்

வீட்டுத்தோட்டத்தில் மணத்தக்காளி

வீட்டுத்தோட்டத்தில் வளர்கிற மணத்தக்காளி கீரையை பறித்து சாறு வைக்கலாம் என முடிவு செய்த போது… தோட்ட த்து தக்காளியும், பச்சை மிளகாயும் கூடவே சேர்மான பொருளாக ஒத்துழைத்தது.

சொலனம் நைக்ரம் எனப்படுகிற இந்த தாவரம் எந்த நாட்டிலிருந்து தோன்றியது என்பது குறித்து துல்லியமான தகவல் இல்லை. உலகின் பல கண்டங்களில் பரவலாக வளர்வதால், ஒரு குறிப்பிட்ட பகுதியை இந்த தாவரத்தின் தாயகம் என்று சொல்வது கடினம்.

இந்த தாவரத்தின் இலைகள் அல்லது பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக இல்லையா என்பதில் நிறைய கருத்து வேறு பாடுகள் உள்ளன. அது குறித்த பார்வைகள் ஒப்பீட்டள வில் நச்சுத்தன்மையிலிருந்து சாப்பிடுவதற்கு முற்றிலும் பாதுகாப்பானவை என்பது வரை வேறுபடுகின்றன. ஒரு காலகட்டம் வரை இதன் விஷத்தன்மை குறித்த கற்பிதங் களால், பரவலாக மணத்தக்காளி செடியின் மகத்துவம் நசுக்கப்பட்டு இருந்தது. காலப்போக்கில் அந்த கருத்துக்கள் மங்க தொடங்கிய பின், உலகின் பல்வேறு பகுதிகளில் அதன் பழங்கள் மற்றும் அதன் இலைகளுக்காகவே, ஒரு உணவுப் பயிராக பயிரிடப்பட்டது.

மணத்தக்காளி கீரையானது துவர்ப்புடன் கூடிய இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும். 100 கிராம் மணத்தக்காளி கீரையில் நீர் சத்து 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%மும் உள்ளன.

நம் உடம்பில் ஏற்படும் ஒவ்வொரு வியாதிக்கும் இயற்கை யான வேர்கள், பச்சிலைகள், பூக்கள், காய்கள், பழங்கள், மற்றும் மரப்பட்டைகள் மூலம் முழுமையான தீர்வுகள் கிடைக்கிறது என்பது உண்மை.பக்க விளைவுகளும் கிடையாது

ஒரு காலத்தில் இயற்கை மருந்துகளையே உண்டு பழகிய நம் உடம்பை, செயற்கை மருந்துகள் அதிகம் எடுத்துக்கொண்டு, நம் உடம்பை பாழ்படுத்தி வைத்துள்ளோம். இப்போது இயற்கை மருந்துகள் உட்கொண்டால் நம் உடம்பு ஏற்றுக் கொள்ள சற்று திணறுகிறது நமக்கோ பொறுமை இல்லை. மாற்று மருந்து / மருத்துவம் தேடி ஓடுகிறோம்.

இயன்றவரை இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருக்கும் மருத்துவ மகத்துவத்தை கண்டறிந்து பயனடை வோம்.இயற்கையோடு வாழ பழகுவோம்.., இயற்கையை நேசிப்போம்..

 # இங்கிலாந்திலிருந்து  சங்கர் 🍃 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top