Close
ஏப்ரல் 5, 2025 7:55 மணி

ஈரோட்டில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு

கோப்பு படம்

ஈரோடு, திண்டல், தெற்கு பள்ளம், அபர்ணா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (40). இவரது கணவர் லட்சுமி நாராயணன் காலம் ஆகிவிட்ட நிலையில் ஒரே மகனுடன் வசித்து வந்தார்.

அண்மையில் இவரது மகனுக்கு சென்னையில் பணி கிடைத்ததால், தனது மகனை பார்ப்பதற்காக கடந்த 9ஆம் தேதி சென்னைக்கு சென்றார். பின்னர் சென்னையிலிருந்து இன்று காலை வீடு திரும்பிய ஸ்ரீ வித்யாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவருக்கு பின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது  பீரோ திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த  17 பவுன் தங்க நகைகளும் ரூ.8000 ரொக்கமும் திருட்டுப் போனது தெரியவந்தது.

பீரோவின் மேல் அதன் சாவியை வைத்திருந்ததால் திருட வந்த மர்ம நபர்கள் மிகவும் எளிதாக பணம் நகைகளை திருடிச் சென்று விட்டதாகத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸாருக்கு தகவல் அளித்ததின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கைரேகைகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

முதற் கட்டமாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி யுள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top