Close
நவம்பர் 22, 2024 8:32 மணி

மதுரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

நீதிமன்ற  உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை  அதிகாரிகள் காக்கர்லாஉஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி  சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோரை சென்னை போலீசஸார் அழைத்து வந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர் படுத்தினர்.

பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றிய சிலர் தங்களது கோரிக்கைகளுக்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற மதுரைகிளை  பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி கடந்த 2016 -ஆம் ஆண்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத கல்வித் துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி  உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது.

ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களை கைது செய்து ஆஜர்படுத்தும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி  அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முன்னதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார் ஆகியோரை சென்னை போலீசார் அழைத்து வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top