Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

பள்ளி மாணவர்களுக்கு மனநல மேம்பாட்டுப் பயிற்சி

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மனநல மேம்பாட்டுப் பயிற்சி/ளிக்கிறார், டாக்டர் கார்த்திக்தெய்வநாயகம்

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்திலேயே முதன் முறையாக உளவியல் ஆலோசனைக்கென்று தனி ஆசிரியரை நியமித்ததோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ந்து மனநல மேம்பாட்டு பயிற்சி வழங்கி வரும் பள்ளியாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி மற்றும் மனநல மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

நிகழ்வுக்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், மாணவர்களிடம் தேர்வுகளை எதிர்க்கொள்ளும் முறைப்பற்றியும் தற்போதுள்ள காலச் சூழலில் சமூக வலைதளங்களில் மாணவர்கள் எதிர்கொள் ளும் மனச்சிக்கல்களை தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, மனநலம் சார்ந்த மாணவர்களின் பல கேள்விகளுக்கு மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தெளிவான விளக்கம் அளித்தார். மாணவர்களுக்கு எளிதான பல பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பயிற்சியில் பங்கேற்றனர். முன்னதாக ஆசிரியர் கணியன் செல்வராஜ் வரவேற்றார். துணைமுதல்வர் குமாரவேல் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top