Close
செப்டம்பர் 20, 2024 1:32 காலை

செப் 15 ல் பேரறிஞர் அண்ணா 115 ஆவது பிறந்தநாள்: உருவச்சிலையை சுத்தம் செய்த புதுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையிலுள்ள அண்ணா உருவச்சிலைய சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி ஊழியர்கள்

பேரறிஞர் அண்ணா 115 -ஆவது பிறந்த நாள் செப். 15 -ல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அவரது உருவச்சிலை சுத்தம் செய்யும் பணியை நகராட்சி ஊழியர்கள்  வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

பேரறிஞர் அண்ணா ஓர் பார்வை…திராவிடர் முன்னேற்ற கழகம் என்ற விதையை முதன்முதலில் விதைத்த சி.என்.அண்ணாதுரையின் 115-ஆவது பிறந்த நாள் செப் 15 -ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை கடந்த 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி, நடராஜன் – பங்காரு அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்த அவர், காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் ஆரம்ப கல்வி கற்றார். பிறகு உயர் கல்விக்காக சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். முதலில் பி.ஏ.(ஹானர்ஸ்) பட்டம் பெற்ற அவர் பொருளாதாரத்திலும், அரசியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தமிழ் மொழியில் மிகுந்த புலமை பெற்றவர் என்பதால் அவர் “அறிஞர் அண்ணா” என்று அன்போடு அழைக்கப்பட்டார்.. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் பொதுச் செயலாளர் மட்டுமின்றி, முதன்முதலாக வந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் முதல்வரும் ஆவார்.

தன் இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் கொண்ட அவர் பெரியாரின் திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். பிறகு அங்கி ருந்து விலகிய அண்ணா, 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதியன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.

இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய அண்ணாதுரை 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. இவ்வாறாக திராவிடத்துக்கும், தமிழகத்துக்கும் அளப்பரிய பணியாற்றிய முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை மாநிலம் முழுவதும் திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் உற்சாகமாக கொண்டாடுவதற்காக திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top