Close
ஏப்ரல் 18, 2025 11:49 காலை

மதுரையில் தரம் புரண்ட ரயில் பெட்டி..

மதுரை

மதுரை ரயில் நிலையத்தில் தரம் புரண்ட பெட்டி

மதுரை ரயில் நிலையம் அருகே காலியாக இருந்த ரயில் பெட்டியை போடி லைன் பகுதியில் நிறுத்தி வைப்பதற்காக கொண்டு வந்த போது, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்டி மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது.இதனால், ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் போடி லைன் பகுதியில், இதேபோல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால், 9 பேர் இறந்தனர்.தற்போது, ரயில் பெட்டி தடம் விலகியதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று தடம் விலகிய ரயில் பெட்டியை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top