Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

கீரனூரில் புதிய நீர் ஏற்று நிலையத்துக்கு எம்எல்ஏ சின்னதுரை அடிக்கல்

புதுக்கோட்டை

கீரனூரில் ரூ.11.40 கோடி மதிப்பில்  கட்டப்படவுள்ள நீர் ஏற்றுநிலையத்துக்கு  எம்எல்ஏ சின்னதுரை அடிக்கல் நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.11.40 கோடி மதிப்பில் நீர் ஏற்றும் நிலையம் அமைப்பதற்காக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அடிக்கல் நாட்டினார்.

கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கீரனூர் பேரூராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் இருந்து நீரைக் கொண்டு வருவதற்காக அம்ருத் 2.0 திட்டத்திலிருந்து ரூ.11 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நீர் ஏற்றும் நிலையமும், ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் 3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அடிக்கல் நாட்டினார். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டின், குன்றாண்டார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் கே.என்.ஆர்.போஸ், கீரனூர் பேரூராட்சித் தலைவர் ஜெயம்மீரா ரவிக்குமார், செயல் அலுவலர் கரு.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top