Close
செப்டம்பர் 20, 2024 4:13 காலை

புதுக்கோட்டையில் 14 நாட்களில் 43 பேர் டெங்குவால் பாதிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் டெங்கு பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில்  செப். 1 -ஆம் தேதி முதல் வியாழக்கிழமை மாலை வரையில் 14 நாட்களில், 43 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பகலில் கடிக்கும் ஏடிஸ் வகைக் கொசுக்கள், தூய மழைநீர் தேங்கும் இடங்களில் முட்டையிட்டுப் பெருகி, டெங்குக் காய்ச்சலை உருவாக்குகின்றன. தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் டெங்குக் காய்ச்சலும் பரவலாக பதிவாகி வருகிறது.
புதுக்கோட்டையைப் பொருத்தவரை செப். 1ஆம் தேதி முதல் 14 -ஆம் தேதி வரையிலான  புள்ளிவிவரத்தின்படி மொத்தம் 43 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 4 பேர் வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட வர்கள்.  இந்த 4 பேரில், 2 பேர் திருவரங்குளம் ஒன்றியப் பகுதியைச் சேர்ந்தவர்கள். 2 பேர் அறந்தாங்கி நகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். டெங்கு உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலானவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ராம் கணேஷ் கூறுகையில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 15 முதல் 20 காய்ச்சல் நபர்கள் மருத்துவமனைக்கு வரும் நிலையில், அவர்களிடம் செய்த பரிசோதனையில் சராசரியாக 2 முதல் 5 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்படுகிறது  என தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிப்பிரிவு தயார்.. 
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன்  டாக்டர் ராஜ்மோகன் கூறியது:  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 70 படுக்கைகளுடன் டெங்கு சிகிச்சைப் பிரிவு தயாரா் நிலையில்  உள்ளது. இது வரை யாரும் இங்கு அனுமதிக்கப்படவில்லை. போதுமான மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சமின்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரலாம் என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top