Close
ஏப்ரல் 10, 2025 10:45 மணி

புத்தகம் அறிவோம்… அன்னை தெரசா…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

மனிதர்களை மதிப்பீடு செய்துகொண்டு இருந்தால் ஒருக்காலும் உனக்கு அன்புசெய்ய வாய்ப்பு கிடைக்காது
பக். 14.

அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது; செயல்களால் விளக்கம் பெறுகிறது. அன்பு(பக்.23).

1962 ஜனவரி 26 -ஆம் நாள் அன்னைக்கு இந்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. இந்தியர் அல்லாத ஒருவருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டது அதுவே முதல் முறை. 1979 -ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் வழங்கப்பட்ட உலகின் சமாதானத்துக்கான மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு அவரது புகழுக்கும் மகுடமாக அமைந்தது.

அதற்கான விழாவில் கலந்துகொள்ள நார்வே சென்ற அன்னை விழா நடக்கும் இடத்துக்கு சாதாரண பேருந்திலேயே சென்று இறங்கினார். விலை குறைந்த நூல் சேலையையே அணிந்தி ருந்தார். 1980 ஆம் ஆண்டு அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” வழங்கப்பட்டது.(பக்.76).

காந்தியோ அல்லது அன்னை தெரசாவோ இன்று இருந்திருந் தால் மணிப்பூருக்கு போயிருப்பார்கள். தங்களின் அன்பின் மூலமாக அந்த மக்களிடம், பகை உணர்ச்சியை அகற்றி அன்பையும், சமாதானத்தையும் விதைத்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

1962 வளைகுடாப் போரை நிறுத்தச் சொல்லி அன்னை எழுதிய கடிதங்களைப் படித்து, போர் முடிந்தபின் தன் நாட்டுக்கு அழைத்து, போரால் சிதைந்து கிடந்த தன் தேசத்தை, தன் மக்களை அன்பின் வழி நெறிப்படுத்தியவர் ஈராக்கின் சதாம் உசேன்.

இன்றைக்கு யூகோஸ்லாவியா என்று அழைக்கப்படும் அல்பேனியாவில், 1910 ஆகஸ்ட் 26ல் “ஆக்னஸ் கோன்சா”வாக பிறந்து, பிறந்த தேசத்தைத் துறந்து, இந்தியாவிற்கு வந்து அன்பின் செயல்பாட்டால் “அன்னை தெரசா”வாக மாறிய அவர்தான், தூரத்தில் இருக்கும் உக்ரைன் அருகில் இருக்கும் மணிப்பூர் மக்களிடம் அன்பையும், நம்பிக்கையையும் விதைக்க தேவை.

“அன்னை தெரசா” நூல்ஆனந்தவிகடனில் ‘நாயகன் ‘என்ற தொடரில் கட்டுரையாக அஜயன்பாலாவால் எழுதப்பட்டதன் நூல் வடிவம். பிறப்பு முதல் நிறைவு வரை அன்னையின் வரலாற்றை 13 தலைப்புகளில் வரைந்திருக்கிறார் பாலா.
எல்லோருக்குமான நூல்.விகடன் பிரசுரம்,சென்னை.

#சா. விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top