Close
நவம்பர் 22, 2024 12:05 மணி

தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையிலுள்ள பெரியார் உருவப்படத்துக்கு மரியாதை செய்த சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையிலான திமுக நிர்வாகிகள்

தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு . புதுக்கோட்டையில் உள்ள அவரது உருவச்சிலைக்கும். உருவப்படத்திற்கும் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி  தலைமையில் திமுக நிர்வாகிகள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகம்… புதுக்கோட்டையில் மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமையில்  நிர்வாகிகள்  சின்னப்பா பூங்காவிலிருந்து ஊர்வலமாக அண்ணாசிலை வழியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

புதுக்கோட்டை
பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செய்த திராவிடர்கழகத்தினர்

இந்த நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் செ.இராசேந்திரன், நகரத் தலைவர் ரெ.சு.தருமராசு, நகரச் செயலாளர் பூ.சி.இளங்கோ, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் செ.அ.தர்மசேகர், துணைத் தலைவர் தி.குணசேகரன், நகர ப.க. தலைவர் பி.சேகர், ஒன்றியத் தலைவர் சாமி.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.

திமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி தலைமையில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இரா.சு. கவிதைப்பித்தன், மாநில மருத்துவரணி நிர்வாகி அண்ணாமலைரகுபதி, நகரச் செயலாளர் ஆ.செந்தில்குமார்.

முன்னாள் நகரச் செயலாளர் அரு.வீரமணி, நகர் மன்றத் துணைத் தலைவர் லியாகத்அலி மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வார்டு கவுன்சிலர்களும் வட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

மறுமலர்ச்சி திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் மாத்தூர் கலியமூர்த்தி தலைமையில் வழக்கறிஞர்கள் காசி.சிற்றரசு, ராஜாஆதிமூலம், மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும்கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.
விஜய் மக்கள் இயக்கம்..  இந்த ஆண்டு முதல் முறையாக மாவட்டப் பொறுப்பாளர் பர்வேஸ் தலைமையில் அந்த இயக்கத்தின் இளைஞர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கருப்பு உடையணிந்து வந்து தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

புதுக்கோட்டை
பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செய்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

அந்த அமைப்பின் சார்பில் தந்தை பெரியாரின் 145 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிளக்ஸ் பேனரும் வைத்து அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடே இல்ல. தமிழ்நாட்டின் பிதாமகனும் கதாநாயகனும் அவர்தான் என்றும் தெரிவித்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி வடபுலத்திலும் இப்போது தந்தை பெரியாரின் புகழ் பரவி அவரது பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடத் தொடங்கி இருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top