Close
நவம்பர் 22, 2024 8:25 காலை

பெரியார் பிறந்தநாள்.. இடதுசாரிகள் பொது மேடை சார்பில் உறுதி ஏற்பு

தஞ்சாவூர்

தஞ்சையில் மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் பேரணி

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா  இடதுசாரிகள் பொதுமேடை சார்பில்  நேற்று  (17.9.23) தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை முன்பு  இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப் பாளர் துரை.மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எஸ். தாமரைச்செல்வன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா,மார்க்சிய, பெரியாரிய அம்பேத்கரிய உணர்வாளர்கள் ஆட்டோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் மூர்த்தி,சாமிநாதன், ஏ ஐ டி யூ சி ஆட்டோ சங்க மாநகரச் செயலாளர் ராஜா,

தொமுச ஆட்டோ சங்க ஜஸ்டின் மற்றும் இடதுசாரி ஆர்வலர் கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன், காமராஜர்,ரமேஷ், பாஸ்கர்,ஆறுமுகம், கல்லூரி மாணவர்கள் பைரவ வெங்கட், அப்பு பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஆண்டான்-அடிமை, குலக்கல்விமுறை, பெண்ணடிமை கொள்கைகளை நடைமுறைப் படுத்துகின்ற மனுதர்ம சநாதன கொள்கைகளை முறியடிப்போம், விஸ்வகர்மா குலத்தொழில் திட்டத்தை விரட்டி அடிப்போம், பெரியார் வகுத்து தந்த சமூக நீதி கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்போம் என்று  உறுதி ஏற்கப்பட்டது.

தஞ்சாவூர்
பெரியார் பிறந்தநாளில் சிலைக்கு மரியாதை செய்த மக்கள் அதிகாரம் அமைப்பினர்

மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய உணர்வாளர்கள் ஆட்டோ கூட்டமைப்பு இதே போல ஈஸ்வரி நகர் ரெட்டிபாளையம் ரோடு அன்னை சிவகாமி நகரில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய உணர்வாளர்கள் ஆட்டோ கூட்டமைப்பு சார்பாக மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்கள் அதிகாரம் பேரணி..  மக்கள் அதிகாரம் சார்பில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் சநாதன எதிர்ப்பு பேரணி தஞ்சாவூர் பனகல் கட்டிடத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு பெரியார் சிலை வந்தடைந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் தலைமையில், மாவட்ட செயலாளர் தேவா, மாவட்ட தலைவர் அருள், நிர்வாகிகள் லட்சுமணன், தினகரன், செல்வபதி,மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணைச் செயலாளர் ராவணன், மாநகர செயலாளர் எழுத்தாளர் சாம்பான்,

இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அ.ரெ.முகிலன், மாநகரச் செயலாளர் தமிழ், அகில இந்திய மறுமலர்ச்சி முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன், மகளிர் அமைப்பு நிர்வாகிகள் சரோஜினி,கத்திஜா, மாணவிகள் தர்ஷினி, வர்ஷினி பெற்றோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிவில், தீண்டாமை போல் சாதி ஒழிப்பையும் சட்டமாக்குவோம்.குலத் தொழிலை மீண்டும் அமல்படுத்தும் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை முறியடிப்போம்.வர்ணாசிரம தர்மத்தை பாதுகாத்து வரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமை சேவை செய்யும் ஆர்எஸ்எஸ், பாஜக வை ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவோம். பெரியார்,அம்பேத்கர், மார்க்ஸ் வழியில் மனுதர்ம சித்தாந்தத்தை வேரோடு சாய்ப்போம் என்று சநாதன ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. .

சிஐடியூ தஞ்சை மாவட்ட சி ஐ டி யூ தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட துணை செயலாளர் கே அன்பு தலைமையில் நிர்வாகிகள் ஏ.ராஜா, எஸ். செங்குட்டுவன், செல்வம், காதர், என்.ராமானுஜம், ஏ.கண்ணன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top