சென்னை திருவொற்றியூரில் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்ட புகாரில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது.
திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே ஹன்சா கோர்ட் யார்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் 263 வீடுகள் அமைந்துள்ளன. இங்கு குடியிருப்போர் நல சங்கம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரிடமிருந்தும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக சந்தா செலுத்து கின்றனர்.
இந்நிலையில் கட்டடங்களை புதுப்பித்து வர்ணம் பூசுதல், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் உள்ளிட்டவைக ளுக்காக ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையான ரூ. 1.30 கோடியில் சுமார் ரூ.22 லட்சம் நிதியை சங்க நிர்வாகிகளாக செயல்பட்டு வந்த இளங்கோ, கருப்பையா, மகேஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து முறைகேடு செய்துவிட்டதாகவும், இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் எஸ்.சுகுமார், எம்.டி.சேகர் ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இப்புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸா ருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து திருவொற்றியூர் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.