Close
நவம்பர் 25, 2024 11:06 காலை

புதுக்கோட்டையில் ஊர்வலமாகச் சென்று கரைக்கப்பட்ட விநாயகா் சிலைகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சிலைகளின் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 18-ஆம்  தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற் றன.  புதுக்கோட்டை மாவட்டத்தில் 710-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.

இந்தநிலையில்  புதுக்கோட்டையில்  வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின்  ஊர்வலம் புதன்கிழமை  நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை திலகர் திடலுக்கு கொண்டு வரப்பட்டு பின் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டது.

ஊர்வலத்தை  ஊர்வலம் மேல 4-ஆம் வீதி, தெற்கு 4-ஆம் வீதி பழைய பேருந்து  நிலையம் வழியாக சென்றது.  5 அடி சிலையில் இருந்து 12 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டன.

ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட ஏறத்தாழ 40  விநாயகர் சிலைகள் புதுக்குளத்தில் உள்ள தண்ணீரில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்துக்கு நகர காவல்துணை கண்காணிப்பாளர்  ராகவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் விநாயகா் சிலை ஊர்வலத்தை கண்காணிக்க 75 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top