Close
நவம்பர் 25, 2024 7:00 காலை

இலவச கணினி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

தமிழ்நாடு

ஹரிஷ்மாலை கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகர் முன்னிலையில் முதல்வர் மா.கோவிந்தராசு அவர்கள் மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கினார்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பெண்கள் அரசு கல்லூரியில் இலவச கணினி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்  வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பெண்கள் அரசு கல்லூரியில் இலவச கணினி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பெண்கள் அரசு கல்லூரியில் இளங்கலை (BA., B.Sc., B.Com ) மற்றும் முதுகலை (MA., M.Sc., M.Com )  கல்வி பயிலும் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான அடிப்படை கணினி பயிற்சி  MS OFFICE , TALLY  எஸ்எஸ்ஐ கணினி  பயிற்சி மையம் மற்றும் ஹரிஷ்மாலை  கல்வி மற்றும் அறக்கட்டளை  சார்பில் நடத்தப்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஹரிஷ்மாலை  கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனர்  சந்திரசேகர்  மற்றும் ஹரிஷ்மாலை  கல்வி மற்றும் அறக்கட்டளை அறங்காவலர் ராமலட்சுமி ஆகியோர்   பயிற்சியளித்தனர்.

தமிழ்நாடு
கணினி பயிற்சி சான்றிதழ் பெற்ற மாணவிகள்

கல்லூரியில்  ஹரிஷ் மாலை  கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனர்  சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்ற நடைபெற்ற    விழாவில்,  முதல்வர் மா.கோவிந்தராசு  மாணவிகளுக்கு  சான்றிதழ்   வழங்கி வாழ்த்தினார். .இந்நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 இலவச கணினி பயிற்சி பெற விரும்பும் கல்லூரி மாணவிகள் அனைவரும் திருச்சி சாலையில்  உள்ள ஹரிஷ்மாலை  கல்வி மற்றும் அறக்கட்டளை மற்றும் எஸ்எஸ்ஐ கணினி  பயிற்சி மையத்தை   93610 25436  என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நேரில் வந்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என ஹரிஷ்மாலை  கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனர்  சந்திரசேகர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top