Close
நவம்பர் 22, 2024 4:54 மணி

உச்சாணி கிராமத்தில் எல்ஐசி சார்பில் மரக்கன்று நடவு

புதுக்கோட்டை

உச்சாணி கிராமத்தில் பிள்ளையார் ஊருணியில் எல்ஐசி சார்பில் மரக்கன்று நடப்பட்டது

புதுக்கோட்டை அருகே உள்ள  உச்சாணி கிராமத்தில் பிள்ளையார் ஊரணியில் சுற்று சூழல்பாதுகாப்பை முன்னிறுத்தி எல்ஐசி யின் சார்பில் மரக்கன்று நடப்பட்டது.

புதுக்கோட்டை எல்ஐசி நிறுவனம் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் ஆகியோர் இணைந்து பிள்ளையார் ஊருணி கிராமங்களைச் சுற்றி சுமார் 500 மரக்கன்றுகள் நடும் நடுவ தென முடிவு செய்யப்பட்டு முதல்கட்டமாக பிள்ளையார்  ஊருணியில்  எல்ஐசி முதுநிலை புதுக்கோட்டை கிளை மேலாளர் பழனியப்பன்   தலைமையில்  சுமார் 25 மரக்கன்றுகள்  நடப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி கோட்ட மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர் லயன்ஸ் சத்தியமூர்த்தி, சமூக ஆர்வலர்    இளங்கோ மற்றும் சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை
உச்சாணி கிராமத்தில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது

பின்னர்  எல்ஐசி மேலாளர் பழனியப்பன்  கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசியதாவது: மரக்கன்றுகள் நடுவதால்  நமக்கு நிழல் தரும் என்பதை விட ஒரு சுற்றுப்புற சூழ்நிலை பாதுகாக்க உதவுகிறது. மனிதன் உயிர்வாழ்வ தற்குத் தேவையான ஆக்சிஜனை தருவதில் மரங்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி கூறியதாவது: தற்போது  பிள்ளையார் ஊருணி கரை, சாலையோரங்கள்,   பள்ளி வளாகம்  சுமார் 500 மரக்கன்று  நடுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.

முதல்கட்டமாக  ஊருணியில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும்  தெருக்கள், பள்ளி வளாகம் மற்றும் சாலையோரங் களில்  மரக்கன்றுகள் நடப்படும். இதன் மூலம்  சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றார். மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கியுள்ள எல்ஐசி நிர்வாகத்துக்கு கிராமத்து மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top