Close
செப்டம்பர் 20, 2024 8:27 காலை

ஈரோட்டில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

ஈரோடு

ஈரோட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்  விமரிசையாக நடந்தது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஈரோடு மாவட்டம் முழுதும் இந்து முன்னணி சார்பில் 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.

இந்த சிலைகளுக்கு தினந்தோறும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஈரோடு மாநகரில் மட்டும் 185 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் விசர்ஜனம் செய்வதற்காக ஈரோடு, சம்பத் நகர் பகுதிக்கு தாரை தப்பட்டைகள் முழங்க கொண்டு வரப்பட்டன.

இதைத் தொடர்ந்து சம்பத் நகரில் தொடங்கிய ஊர்வலம் முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, எல்லை மாரியம்மன் கோயில், கருக்கல்பாளையம் காவிரி ரோடு வழியாக காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. பெண்கள் முளைப்பாரி எடுத்தும், கும்மி அடித்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஈரோடு
விநாயகருக்கு முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள்

இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த விசர்ஜன ஊர்வலத்தை கிச்சன் கிங் கேட்டரிங் சர்வீஸ் நிர்வாக இயக்குனர் ஜி.விவேகானந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக மொடக்குறிச்சி எம்எல்ஏ- சி. கே. சரஸ்வதி, எஸ்.ஆர். டெக்ஸ் எஸ்.செல்வராஜ், அம்மன் டெக்ஸ்டைல் ப்ராசஸ்சிங் மில் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் நா.சண்முக சுந்தரம், மாநில செயலாளர் குற்றாலநாதன் சிறப்புரை யாற்றினர்.

மாநில பொதுச் செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் கார்த்தி முன்னிலை வகித்தனர்.

விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஈரோடு ஸ்ரீ அகர்வால் சங்கம் சார்பில் பிரசாதமும், சம்பத் நகர் ஆட்டோ உரிமையாளர் சங்கம் மற்றும் சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது.

முன்னதாக ஈரோடு, வீரப்பன்சத்திரம் கலைவாணர் வீதியில் ஜிம் பாய்ஸ் நண்பர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சித்தி விநாயகர் சிலை ரூபாய் நோட்டுகளால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை 10, 20, 50, 100, 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஈரோடு
விநாயகருக்கு நடைபெற்ற பூஜை

கிங் பாய்ஸ் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகிகள் பி.எஸ்.துரைசாமி , வி வடிவேல் , எஸ்.கோபால் , ஸ்ரீ மணிகண்டன் , கே.தினேஷ்குமார் , வி.விக்னேஷ் , சி.குமரேசன் , எம்.சரவணன் , ஸ்ரீ மதன் , ஆகியோர் குழு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சித்தி விநாயகர் சிலை 1.50 லட்சம் ரூபாய் நோட்டுகளால். அலங்கரிக்கப்பட்டும்,பூஜை தட்டில் 50,000 ரூபாய் நோட்டுகளை வைக்கப்பட்டும், தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களின் சுவாமி தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.

சிலையை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு சுண்டல், பொங்கல், புளியோதரை போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது. ரூபாய் பணம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த விநாயகர் சிலை நேற்று காவேரி ஆற்றில் விஜர்சனம்  செய்யப்பட்டது.

# செய்தி- ஈரோடு மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top