Close
செப்டம்பர் 20, 2024 3:42 காலை

கோபி அருகே புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்: செங்கோட்டையன் திறப்பு

ஈரோடு

புதிய அங்கன்வாடி மையக்கட்டடத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதி மேம்மபாட்டு தொகுதியின் கீழ் ரூ 12.61 லட்சம் மதிப்பீட்டில் குள்ளம் பாளையம், ஆசிரியர் நகரில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ  திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: ஈரோடு சத்தியமங்கலம்  சாலை நான்கு வழியாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக ஒத்தக் குதிரை அருகே சுங்கச்சாவடி அமைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடக்கிறது.

அது தொடர்ந்து நான் கடிதம் வாயிலாக சுங்கச்சாவடி அமைக்க வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலை துறைக்கு தெரிவித்துள்ளேன். ஆகையால் இப்பகுதியில் சுங்கச்சாவடி அமையாது அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால், மகளிருக்கான உரிமை தொகை மாதம் ரூ.1500 வழங்கியிருப்போம். ஆனால் திமுகவினர் ஆயிரம் வழங்கினாலும் மகளிர் அனைவருக்கும் வழங்காமல் உள்ளனர்.

கோபி வெங்கடேஸ்வரா நகரில் சாக்கடை வசதி மற்றும் ரோடு வசதி வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். இவை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆசிரியர் நகருக்கு பகுதி நேர ரேஷன் கடை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது ஆசிரியர் நகரில் 100 குடும்ப அட்டை பெற்றுள்ளனர். இவை 300 ஆக இணைத்தால் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்  கே.ஏ.செங்கோட்டையன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top