Close
செப்டம்பர் 20, 2024 5:55 காலை

திருடு போன பணம் நகை திரும்பி வர வேண்டி கோயில் சூலாயுதத்தில் கோழியை சொருகி வைத்ததால் பரபரப்பு

ஈரோடு

வெள்ளாங்கோவிலில் உள்ள மாகாளியம்மன் கோவில் சூலாயுதத்தில் வேண்டுதலுக்காக குத்தி வைக்கப்பட்ட கோழி

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி, கடந்த 15-ஆம் தேதி வீட்டை பூட்டி சாவியை மாடிப்படி அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியூர் சென்று விட்டார்.

இதனையடுத்து கடந்த 16-ஆம் தேதி அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் சாவி வாசலில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து, சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை திறந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுவலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், ராமசாமி குடும்பத்தினர் தங்களது வீட்டின் முன்பு ஒரு பேனர் வைத்துள்ளனர். அதில், ‘நகை, பணத்தை திருடியவர்கள் யாராக இருந்தாலும் வெள்ளாங்கோவிலில் உள்ள மாகாளியம்மன் கோயில் முன்பு வைத்து விடவேண்டும். இல்லை என்றால் மாகாளியம்மன் கோயிலின் முன் உள்ள சூலாயுதத்தில் கோழியை குத்தி வைத்து  வேண்டுதல் செய்யப்படும்.

ஈரோடு
வீட்டின் முன்னே வைத்திருந்த பேனர்

அவ்வாறு சூலாயுதத்தில் கோழியை குத்திவிட்டால் நகை, பணம் திருடியவர்கள் குடும்பம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். என்ற வாசகங்கள் அந்த   பேனரில்  குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை பொருட்களை திருடிச் சென்றது யார் என்பது  குறித்து எந்த தகவலும் வரவில்லை. இதைத்தொடர்ந்து  இன்று காலை ராமசாமி கோயில் சூலாயுதத்தில் கோழியை குத்தி வேண்டிக் கொண்டு வந்துள்ளனர்.  இந்த சம்பவம் வெள்ளாங்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top