Close
நவம்பர் 22, 2024 9:30 காலை

புத்தகம் அறிவோம்… இதுவே சனநாயகம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

“கைம்பெண் மறுமணம் அனுமதிக்கப்பட்ட சாதிகளில் கூட கணவனை இழந்த அன்றும், அதைத்தொடர்ந்து சில நாட்களும் கைம்பெண்ணின் உணவு, உடை,நடமாட்டம், சமூக உறவுகள் ஆகியவை கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. தாலி உட்பட அனைத்து அணிகலன்களையும் கழற்றிடுதல், தலையணை இல்லாமால் தரையிலோ அல்லது சாக்கின் மீதோ ஒரு அறையின் ஒரு பகுதியில் அல்லாமல் ‘மூலையில் ‘ உறங்குதல், வெற்றிலைப்பாக்கு போடும் பழக்கம் உடையவராக இருந்தால் உடனே நிறுத்துதல், முதல் எட்டு அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு வேலை மட்டுமே உணவு உண்ணுதல், தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் வாராமல் இருத்தல், பிற ஆடவர் முகம் பார்க்காமல் இருத்தல் ஆகிய கொடுமையான வழக்கங்கள் இன்றும்கூட சில சாதியாரிடத்தில் உள்ளன. பிராமணப் புரோகிதத்தை ஏற்றுக்கொண்ட சாதியாரிடத்தில் இவை மிகவும் கடுமையாகப் பின்பற்றுப்பட்டு வருகின்றன. கைம்பெண்ணுக்கு மொட்டை அடிக்கும் வழக்கம் உடைய பிராமணர்கள் இப்பொழுது கைவிட்டுவிட்டார்கள்”

“கைப் பெண்ணும் சொத்துரிமையும்” கட்டுரையில் பக். 47. “தொ.ப.” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் தமிழ்ப் பண்பாட்டியல் ஆய்வாளர்களில் முதன்மையானவர். நம்முடைய வாய்மொழி வழக்காறுகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் இவருடைய ஆய்வுக் களங்கள். சாதாரண நடைமுறைகளை அவர் அகழ்ந்து காட்டும் போது நமக்கு ஆச்சரியமாகவும், அசாதாரணமானதாகவும் தோன்றி வியக்கவைக்கும்.

“இதுவே சனநாயகம் !” என்ற இந்த நூலில், ” சமயமும் வழிபாடும்” என்ற தலைப்பில் 11 கட்டுரைகளும்,”உறவும்  முறையும்” என்ற தலைப்பில் 3 கட்டுரைகளும் ,”ஆளுமை கள்” என்ற தலைப்பில் 3 கட்டுரைகளும்,நூல் அறிமுகத்தில் 3 ம். மதிப்புரையில் 4 ம் ,ஆய்வுப் பார்வையில் 4 கட்டுரைகளும் உள்ளன.

புத்தகத்தின் தலைப்பான இதுவே சனநாயகம்? என்ற தலைப்பிலான கட்டுரையில் சொல்வது, வரலாற்று ஆய்வைப் பற்றியது. ” மக்கள் வாழ்விலிருந்தும், வாக்கிலிருந்தும் பெறப்படும் செய்திகளால் ஆக்கப்படும் வரலாறு மட்டுமே சனநாயாகத் தன்மை உடையதாக அமைத்திருக்கிறது” என்று சொல்லும் தொ.ப., காலத்திற்கேற்ப வரலாற்றையும், வாழ்க்கைமுறையையும் மாற்றி அமைத்துக்கொள்வதே சாலச்சிறந்ததும் சனநாயக மும் ஆகும். என்கிறார்.

இந்த தேசத்தில் சனாதனத்தை அவ்வளவு எளிதாக ஒழிக்க முடியாது என்பதற்கு தொ.ப.வின் நூலை வாசித்தால் அர்த்தம் விளங்கும். காலச்சுவடு வெளியீடு.91 – 4652-278525.

# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top