Close
ஏப்ரல் 7, 2025 11:00 மணி

நம்பியூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்த திமுக உள்பட அனைத்துக்கட்சிகள்

ஈரோடு

நம்பியூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த திமுக உள்ளிட்ட கட்சியினர்

ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூராட்சி மாதாந்திர கவுன்சிலர் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரின் செயல்பாடுகளை கண்டித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நம்பியூர் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் செயல் அலுவலர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

அதில் திமுக கவுன்சிலர்கள் 8 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர் 3 பேரும் அதிமுக, பாஜக சார்பில் தலா ஒரு கவுன்சிலர் என 13 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் (திமுக, நம்பியூர் ஒன்றிய செயலாளர் மற்றும் 6 வார்டு கவுன்சிலர்) வரவில்லை.இதனால் துணை தலைவர் தீபா (காங்கிரஸ் 2 வார்டு கவுன்சிலர்) தலைமையில் கவுன்சிலர்கள் புகார் மனு செயல் அலுவலர் நடராஜன் என்பவரிடம் அளித்தனர்.

அதில்,பேரூராட்சி திமுக தலைவர் செந்தில்குமார் மற்றும் செயல் அலுவலரின் செயல்பாடுகளை கண்டித்தும் பேரூராட்சி வார்டுகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட குறைகளை கண்டுகொள்வதில்லை என்றும் சரி செய்ய முயற்சி எடுப்பதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. துணை தலைவர் தீபா தலைமையில் 13 கவுன்சிலர்களும் கூட்ட அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top