Close
நவம்பர் 24, 2024 9:59 காலை

மணலி, எண்ணூரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.92 கோடியில் மாநராட்சி பள்ளி கட்டடங்கள்

சென்னை

மணலியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்திற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டிய வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி.

சென்னை மணலி, எண்ணூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் துறைமுக நிதி உதவியுடன் ரூ.2.92 கோடியில் கட்டப்பட உள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களுக்கு வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

மணலி பாடசாலை தெருவில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1,600 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டடங்கள் போதிய இல்லாத நிலையில் புதிய வகுப்பறை கட்டடங்களை கட்டித் தருமாறு மாணவர்கள், பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிதி மற்றும் காமராஜர் துறைமுக சமூக பொறுப்புணர்வு திட்ட நிதி உதவியுடன் ரூ. 2.20 கோடியில் கழிப்பறை, மாடிப்படிகளுடன் கூடிய 8 வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது.

இதேபோல் எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தற்போது சுமார் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் வகையில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிதி மற்றும் காமராஜர் துறைமுக சமூகப் பொறுப்புணர்வு நிதி உதவியுடன் ரூ. 71.80 லட்சம் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு திட்டப் பணிகளுக்கான கட்டடப் பணிகளை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவொற்றியூர் கே.பி.சங்கர், மாதவரம் எஸ்.சுதர்சனம், மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல அலுவலர்கள் நவேந்திரன், கோவிந்தராஜ்,  காமராஜர் துறைமு அதிகாரிகள் கருப்பையா, செல்வராஜ்,  மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், மாமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கே.பி.சொக்கலிங்கம், பகுதி செயலாளர் ம.அருள்தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top