Close
நவம்பர் 22, 2024 12:57 காலை

திருவொற்றியூர் ஸ்ரீ வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா

சென்னை

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தொண்டை மண்டலத்திலுள்ள 32 சிவன் கோயில்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகவும் உள்ள திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலின் முக்கிய விழாக்களில் நவராத்திரி திருவிழா முக்கியமானது.

தொடர்ந்து பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறும் இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை யொட்டி ஸ்ரீ வடிவுடையம்மன் தபசு அலங்காரத்துடன் கூடிய திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை பராசக்தி அலங்காரம், செவ்வாய்க்கிழமை- நந்தினி, புதன்கிழமை- கௌரி, வியாழக்கிழமை – பத்மாவதி, வெள்ளிக்கிழமை – உமாமகேஸ்வரி, சனிக்கிழமை- ராஜராஜேஸ்வரி, ஞாயிற்றுக்கிழமை- மஹிஷாசூர மர்த்தினி, திங்கள்கிழமை- சரஸ்வதி அலங்காரத்தில் வீதி உலா நடைபெற உள்ளது.

இறுதி நாளான அக்.24-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு மீனாட்சி அலங்காரத்துடன் வடிவுடையம்மன் தியாகராஜ சுவாமியோடு நான்கு மாட வீதிகளில் உலா வரும் உற்சவம் நடைபெற உள்ளது.

நவராத்திரி விழாவினையொட்டி லட்சார்ச்சனை காலை மாலை என இருவேளையும் நடைபெற உள்ளது. தினசரி மாலை பக்தி இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  நவராத்திர விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எஸ்.சுப்பிரமணியம், தலைமையில் கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள்,  உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top