Close
நவம்பர் 22, 2024 6:35 மணி

முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கோ-கோ விளையாட்டையும் சேர்க்க கோரிக்கை

தமிழ்நாடு

முதல்வர் கோப்பை போட்டிகளில் கோ-கோ விளையாட்டை சேர்க்க கோரிக்கை

தமிழக அரசு முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கோ-கோ விளையாட்டையும் சேர்க்க வேண்டும். என சர்வதேச கோ-கோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலேசியாவில் உள்ள மலாக்கா சர்வதேச அளவிலான கோகோ போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு மலேசியா சென்று விளையாடி வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஜாய் நடாஷா மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பால ஷங்கர் டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை வந்த டைந்தனர்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மாணவி ஜாய் நடாஷா கூறியதாவது:

நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது இருந்து கோ-கோ பயிற்சி பெற்றேன்.டெல்லியில் 15 நாட்கள் சிறப்பு விளையாட்டு முகாமில் பயிற்சி பெற்று மலேசியா சென்று மலாக்காவின் நடைபெற்ற சர்வதேச போட்டியில் தங்கம் வென்றுள்ளேன்.

எனக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. தமிழகத்திலிருந்து நான்கு பேர் சென்றோம் அதில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட் டோம். முதலமைச்சர் கோப்பைக்கு கோ-கோ விளையாட் டையும் சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.

 கல்லூரி மாணவர் பால சங்கர் கூறும்போது:

நான் வெற்றி பெற்றதற்கு என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முக்கிய காரணம். 8 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன்.

கடந்தாண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சிறப்பாக விளையாடியதால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதைத்தொடர்ந்து உலகக் கோப்பை மற்றும் அல்டிமேட் போட்டிகளுக்கும் தேர்ச்சியாக வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறேன்.  இத்தகு பெருமைவாய்ந்த கோ-கோ விளையாட்டையும் முதல்வர் கோப்பை போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்றார்.

வெற்றி பெற்ற மாணவர்கள் வந்த அதே விமானத்தில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 69 -ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், கருவறை குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வந்தடைந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் சர்வதேச கோ-கோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top