Close
நவம்பர் 24, 2024 6:10 மணி

வாசிப்போர் மன்றத்தில் இறையன்பு நூல்கள் பற்றி உரையாடிய மாணவர்கள்

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் நடந்த வாசிப்போர் மன்றக்கூட்டத்தில் பேசிய மாணவி

வாசிப்போர் மன்றத்தில் எழுத்தாளர் இறையன்பு நூல்கள் பற்றி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் உரையாற்றினர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றத்தின் எட்டாவது கூட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் ஒரு எழுத்தாளரின் நூல்களைப் வாசித்து வந்து  மாணவர்கள் தாங்கள் படித்ததில் பிடித்ததைப் பற்றியும் அந்த எழுத்தாளர்  பற்றியும் கருத்துகளை பரிமாறிக்கொள்வார்கள்.

அந்த வகையில் எட்டாவது கூட்டத்தில் தமிழக பள்ளிகளில் வாசிப்போர் மன்றம் என்பதை ஏற்படுத்தி மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய நூல்களை இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வாசித்து வந்து நூலில் இடம்பெற்றுள்ள சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

மாணவர்கள், தாரிகா “வேடிக்கை மனிதர்கள்”, கவிசாகர் மற்றும் மாரீஸ்வரி  “ஏழாவது அறிவு”, மோகித் மற்றும் ரோஷன்“இல்லறம் இனிக்க”, கௌசிக் மற்றும் மதுஸ்ரீ “வனநாயகம்”  சர்விகா “அழகோ அழகு”, அகமது மீரான்  “மேலே உயர உச்சியிலே”, தாரனா “வைகை மீன்கள்” நெகாசினி “எப்போதும் இன்புற்றிருக்க,” ஹரியுகா~; “ஆற்றங்கரையோரம்”, அட்சயாஸ்ரீ “விருந்தோம்பல்” , ஆண்டோ ஜெய்சன் “சிதறு தேங்காய்” ,லோகித் மற்றும் நீரஜ் ஆகியோர் “இறையன்பு கருவூலம்” ஆகிய நூல்களை வாசித்து நூல் விமர்சனம் செய்தனர்.

வாசிப்போர் மன்றக் கூட்டத்துக்கு, பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், காசாவயல்கண்ணன், உதயகுமார்  நித்திஷ்குமார் மற்றும் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  முன்னதாக வாசிப்போர் மன்றப் பொறுப்பாளர்கள் மாணவி தீபா வரவேற்றார். மாணவர் மா.ஸ்ரீவர்சன் நன்றி கூறினார்.நிகழ்வை ஆ.ஆ. அட்சயா தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top