Close
நவம்பர் 21, 2024 10:39 மணி

காவலர் வீரவணக்க நாள்: போலீஸார் அஞ்சலி

புதுக்கோட்டை

காவலர் நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே

காவலர் வீரவணக்க நாளையொட்டி புதுக்கோட்டையி்லுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக் காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1959 -ஆம் ஆண்டு 21 -ஆம் தேதி  லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர்த் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப்படை போலீஸார் 10 பேர் உயிரிழந்தனர்.

கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த இந்தக் காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும், ஆண்டு தோறும் பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் காவல்துறையில் கடமையாற்றும் போது தமிழகம் உள்பட நாடு முழுதும் நிகழாண்டில் உயிர் நீத்த 189 காவலர்களுக்கு காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நீத்தார் நினைவு சதுக்கத்தில் சனிக்கிழமை  நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே பங்கேற்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து,  பணியின்போது உயிர் நீத்த  போலீஸாருக்கு  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு,  66 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.

இதில்,  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், துணை கண்காணிப்பாளர்கள் ஜி. ராகவி (டவுன்), காயத்ரி (இலுப்பூர்),அப்துல்ரகுமான்(பொன்னமராவதி), தீபக்ரஜினி செங்குட்டுவன்(ஆலங்குடி),கௌதம் (கோட்டைப்பட்டினம்), செங்குட்டுவன் (கீரனூர்), சோமசுந்தரம் (அறந்தாங்கி), சண்முகசுந்தரம் (ஆயுதப்படை)

தனிப்பிரிவு ஆய்வாளர் பன்னீர்செல்வம், மற்றும் ஆயுதப்படை  ஆய்வாளர்கள் கோபிநாத், காமராஜ்,  ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மரியசத்தோதிலக்ராஜ், அழகர் மற்றும் நகர், திருக்கோகர்ணம், கணேஷ்நகர் ஆய்வாளர்கள் ஆயுதப்படைக் காவலர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top