Close
நவம்பர் 24, 2024 12:20 மணி

நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர் களுக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கக் கோரிக்கை

புதுக்கோட்டை

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பேரவைக்கூட்டத்தில் பேசுகிறார், மாநில பொதுச்செயலர் வீ. அமிர்தலிங்கம்

நூறூநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்துக்கான நிதியை உடனடியாக  விடுவிக்க வேண்டுமென விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பேரவைக்கூட்டம் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமையில் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார். விவசாயத் தொழிலாளர்களுக்கான கோரிக்கைகள் குறித்து மாநில செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, துணைத் தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் பேசினர்.

புதுக்கோட்டை
பேரவைக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

தீபாவளிப் பண்டிகையை கருத்தில் கொண்டு நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர் களுக்கு கடந்த நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை  ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

ஒன்றிய அரசு அறிவித்துள்ள பிரதமர் மந்திரி  அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழும் வீடற்றவர்களுக்கும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்க வேண்டும்.  அரசுப் புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலவிநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top