Close
நவம்பர் 22, 2024 12:40 காலை

சென்னை, காமராஜர் துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் தொடக்கம்

சென்னை

துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால் தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் ஊழியர்கள்

சென்னை, காமராஜர் துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் திங்கள்கிழமை தொடங்கியது.

ஊழல், லஞ்சம் உள்ளிட்டவைகள் குறித்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆண்டுதோறும் ஒரு கருப்பொருள் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் இந்த ஆண்டு ‘ஊழல் வேண்டாம் என்போம், நம்மை நாட்டிற்கு அர்ப்பணிப்போம்’ என்ற முழக்கம் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சென்னைத் துறைமுகத்தில் நடைபெற்ற கண்காணிப்பு விழிப்புணர்வு வார தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் துறைமுகத் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணா, துறைத் தலைவர்கள் எஸ்.கிருபானந்தசாமி, ஏ.ஜெயசிம்மா, என்.ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, இந்திரனில் ஹசிரா மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சென்னை
துறைமுகத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெ.பி.ஐரீன் சிந்தியா தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில்.. நடைபெற்ற கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத் தொடக்க நிகழ்ச்சியில் துறைமுகத்தின் மேலாண்இயக்குனர் ஜெ.பி.ஐரீன் சிந்தியா தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இதில் பொது மேலாளர்கள் எதின் படேல், கவிதா சாத்வி, ஜி.எம். பாலன், மக்கள் தொடர்பு அதிகாரி எஸ். பிரியா மற்றும் முக்கிய அதிகாரிகள் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top