Close
நவம்பர் 24, 2024 1:36 காலை

ரூ.6.89 கோடியில் புதுப்பொலிவு பெறும் புதுக்கோட்டை ரயில் நிலையம்..!

புதுக்கோட்டை

புதுப்பொலிவு பெறும் புதுக்கோட்டை ரயில் நிலையம்(மாதிரி வரை படம்)

அம்ரீத் பாரத் திட்டத்தில் புதுப்பொலிவு பெறுகிறது  புதுக்கோட்டை  ரயில் நிலையத்தின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது.

அம்ரீத் பாரத் திட்டத்தில் புதுகை ரயில் நிலையத்தை மேம் படுத்துவதற்கு ரூ. 6.89 கோடியில் பணிகள் முடிவுசெய்யப்பட்டு விரைவில் தொடங்கவுள்ள நிலையில்,  பொலிவு பெறும் ரயில் நிலையத்தின்  முகப்பு குறித்த படத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆயிரம் ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய ரயில்வே துறை முடிவு செய்தது. இதன்படி, தமிழ்நாட்டில் 60 ரயில் நிலையங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.  தொடக்கத்தில் அந்தப் பட்டியலில் புதுக்கோட்டை இல்லாமல் இருந்தது. தகவலறிந்த  புதுக்கோட்டையைச் சேர்ந்த  மாநிலங்களவை  திமுக உறுப்பினர் எம்எம். அப்துல்லா  மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாத  அந்தப் பட்டியலில் புதுக்கோட்டை ரயில் நிலையமும் இடம் பிடித்தது.

இதன் தொடர்ச்சியாக ரூ. 6.89 கோடியில் முதல் கட்டப் பணிகள் மேற்கொள்ள கடந்த ஏப்ரலில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் தற்போதைய படம்.

புதிய நுழைவாயில், ரயில் நிலையத்தில் நீண்ட நடைமேடை, அதற்கான மேற்கூரை, எல்இடி விளக்குகள், புதிய கட்டடங்கள், மரக்கன்றுகள் நடுவது, பொலிவூட்டும் பணிகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தம், ரயில்வே கட்டடங்களில் வண்ண ஓவியங்கள் வரைவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த , ரயில் நிலைத்தின் பொலிவு பெறும் முகப்பு  தோற்றம் பற்றிய மாதிரி வரை படத்தை தெற்கு ரயில்வே வெளியிட் டுள்ளது. தற்போதுள்ள முகப்புடன், மேம்படுத்தப் படவுள்ள முகப்பையும் இணைத்து தெற்கு ரயில்வேயின் சமூக ஊடகங்களில்  பதிவிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு லிப்ட் வசதி..முதல் நடைமேடையில் இருந்து இரண்டாவது நடைமேடைக்கு படிகளை ஏறிச் செல்ல வேண்டியுள்ள நிலையில், முதியவர் கள், முடியாதவர்களுக்காக மேம்பால நடை மேடைக்கு அருகே மின்தூக்கிகள் (லிப்ட்) அமைக்கப் படவுள்ளன. இதற்காக குழி தோண்டும் பணிகள் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top