புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வாசிப்போர் மன்ற மாணவர்களுக்கு மேனாள் தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வாழ்த்துகளை தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசில் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு இருந்தபோது தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்போர் மன்றம் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதன்படி தமிழ்நாட்டில் இந்தப் பள்ளியில்தான் முதன் முதலாக வாசிப்போர் மன்றம் தொடங்கப்பட்டது. வாசிப்போர் மன்றத்தின் எட்டாவது கூட்டத்தில் எழுத்தாளர் தன்னம்பிக் கைப் பேச்சாளர், கவிஞர் இறையன்பு எழுதிய பல்வேறு நூல்களை வாசித்து பிடித்ததைப் பகிர்ந்தனர்.
இதைக் கேட்டறிந்த இறையன்பு வாசிப்போர் மன்றத்தில் கலந்துகொண்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்களை சந்திக்க விரும்பி அழைத்து மாணவர்களுடன் கலந்துரையா டினார். மாணவர்களும் தாங்கள் படித்த அவரின் நூல்கள் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினர்.
மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட இறையன்பு அவர்கள் முதன்முதலில் வாசிப்போர் மன்றம் தொடங்கியதற்கும், எட்டு கூட்டங்கள் நடத்தி வாசிப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு உணரச் செய்தமைக்கும் பாராட்டுகள் என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக ஒன்பதாம் வகுப்பு மாணவி நெகாசினி தான் வரைந்த இறையன்பு ஓவியத்தை வழங்கினார். நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார், காசாவயல் கண்ணன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கி ணைத்தனர்.