Close
நவம்பர் 24, 2024 11:53 காலை

புத்தகம் அறிவோம்… தீபாவளி மலர்( இந்து தமிழ் )

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு காட்சிக்கு உலகத்தை உறையவைக்கும் சக்தி உண்டா? உண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.’நேபாம் கேர்ள் ‘ ஓடி வரக்கூடிய படம். போரின் கோரத்தைச் சொல்லக்கூடிய எவ்வளவோ படங்க ளில் ‘நேபாம் கேர்ள்’ முக்கியமானது. தனித்தவமானது.

இந்தக் கதைக்குப் பின்னால் ஒரு மனிதநேயமிக்க ஒரு கதையும் ஒளிந்திருக்கிறது.(பக்.236).

இந்து தமிழ் திசை தீபாவளி மலரிலும் வாசிப்பதற்கான செய்திகள் நிறைய இருக்கிறது.
நூல் அறிமுகம்,
பிரபலங்கள் எழுதிய கவிதைகள்.
ஆன்மீகம்,
பயணக்கட்டுரைகள்,
சினிமாச் செய்திகள்,
சிறுகதைகள்
பெருமைமிகு பெண்கள்,
வாழ்வு இனிது என்ற தலைப்புகளில் 274 பக்கங்களில் மலர் வடிவம் பெற்றிருக்கிறது.

இதில் பெருமைமிகு பெண்கள் என்ற தலைப்பில் 8 சிறப்பு மிக்க பெண்களைப் பற்றி சுஜாதா எழுதிய கட்டுரைகள் (சுஜாதா மறைந்த நாவலாசிரியர் அல்ல) இடம் பெற்றுள்ளன.
விண்வெளி வீராங்கனை நிஷா.
நினைவுப் பொக்கிஷங்களை மீட்டுக் கொடுக்கும் அமெரிக்க பெண்மணி செல்சி பிரௌன்.
கொலம்பியாவில் கருக்கலைப்புக்கு அனுமதி கிடைத்ததை கொண்டாடும் பெண்கள்.
மருத்துவரான உலக கால்பந்தாட்ட வீராங்கனை டென்மார்க்கின் நாடியா.
“நேபாம் கேர்ள்” என்றழைக்கப்படும் பான் தி கிம் புக் (Phan Thi Kim phuc) மற்றும் இருவரைப் பற்றிய கட்டுரைகளில், எனக்கு இங்கே சொல்லத் தோன்றிய கட்டுரை” இனி நான் நேபாம் கேர்ல் இல்லை” என்ற கட்டுரை.

கலைஞர் மு.கருணாநிதி சொல்வார் ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை ஒரு படம் சொல்லிவிடும் என்று அப்படிப்பட்ட ஒரு படத்தின் செய்திக்கட்டுரைதான் இது. உலகை உலுக்கிய படங்களில் ஒன்றான இது.

50 ஆண்டுகளுக்கு முன்பு, 1972, ஜூன் 8 அன்று தெற்கு வியட்னாமில் எடுக்கப்பட்டது. படத்தின் நடுவில் ஆடையில் லாமல் ஓடி வருபவர்தான் நேபாம் கேர்ல் பான் தி கிம் புக். அப்போது அவருக்கு ஒன்பது வயது. இந்த புகைப்படத்தை எடுத்தவர் நிக் வுட் என்ற அமெரிக்கப் புகைப்படக்காரர்.

இரண்டாவது உலகம் போருக்குப் பின் மிக நீண்டகாலம் நடைபெற்ற போர் வியட்னாம் போர். அந்தப் போரில் அமெரிக்கா, வியட்னாமிய கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக பயன்படுத்திய மோசமான ஆயுதம் நேபாம் எனப்படும் நெருப்புக் குண்டு .அப்படி ஒரு குண்டு தாக்குதலுக்கு உள்ளாகி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒடி வரும் போது தான் இந்தப்படம் எடுக்கப்பட்டது.

படம் எடுத்த நிக் வுட் என்ற அமெரிக்கர் செய்த காரியம் இந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, தீக்காயத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு, உயிர்பிழைக்க மாட்டார் என்று கருதிய கிம் புக்கை காப்பாற்றியது. (இப்போது நம்ம ஊரில் இது போன்ற நிகழ்வு நடந்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனைச் செய்துகொள்ளுங்கள்? அப்போது அவருக்கு 14 மாதங்களில் 17 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றிருக்கிறது..

தற்போது 50 ஆண்டுகள் கழித்தும் வலியும் வேதனையையும் அனுபவித்துக்கொண்டு, மருத்துவராகி, போரினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மருத்துவம், உளவியல் உதவிகளைச் செய்வதற்கான அறக்கட்டளையை நடத்தி வருகிறார் கிம் புக் -தன்னை இப்படி ஒரு படம் எடுத்ததற்காக நிக்வுட் மீது ஒரு சமயம் கோபம் இருந்திருக்கிறது.

இந்தப் படத்தின் ஒரு முக்கியமான பங்களிப்பு வியட்னாம் போர் முடிவுக்கு கொண்டு வரக்காரணமாக இருந்தது.தன்னம் பிக்கை மற்றும் மனிதாபிமானத்தைச் சொல்லும் இந்தக் கட்டுரைக்காகவே இந்த மலரை வாங்கி வாசிக்கலாம்.

# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top