Close
நவம்பர் 21, 2024 10:24 மணி

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு : புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

ஆட்சியர் மெர்சி ரம்யா

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) அறிவிக்கையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல்,  தாவரவியல், வரலாறு மற்றும் புவியியல் போன்ற பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் 2222 காலிப் பணியி டங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான போட்டித் தேர்வு 07.01.2024 அன்று நடத்தப் படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 53 வயது (பொது பிரிவினர்) மற்றும் 58 வயது (இதர பிரிவினர்) ஆகும். மேலும்,  TET PAPER II    -தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023. மேலும் விவரங்களை  www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 20.11.2023 (திங்கட்கிழமை) முதல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்கள் இந்த அலுவலக நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

இப்பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  என  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top