Close
நவம்பர் 22, 2024 5:20 காலை

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இரத்ததான முகாம்

புதுக்கோட்டை

சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதுகை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாம்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன் ராஜா வரவேற்றார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் இப்ராஹிம் பாபு, பொருளாளர் பிரசாத், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் முத்தன் அரசகுமார், நகர்மன்ற உறுப்பினர் ராஜா முஹம்மது, வருங்கால செயலாளர் ஓம்ராஜ், முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு  இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் சரவணன்  கலந்து கொண்டு இரத்ததான முகாமினை தொடக்கி வைத்தார்.

இரத்தகொடையாளர் மற்றும் இரத்த ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் தலைமையில் இரத்த கொடையாளர்கள் சூரிய பிரகாஷ், ராஜிவ்,மதன் ஆகியோர் இரத்த தானம் செய்தனர். நிறைவாக சங்க பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

ரத்ததானத்தின் மகத்துவம்…

இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துகளைச் சந்திக்கின்றோம். ஒருவர் விபத்தினா லேயோ அல்லது வேறு ஏதாவது நோயினா லேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது அங்கு தேவைப்படுவது இரத்தம்.

அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினை செய்வதற்குச் சமம். இரத்ததானம் செய்வதின் பயன்களையோ, சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல, இன்று நம்மில் 20-30% மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடை வெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினை செய்து வருகின்றனர்.

இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:

இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள் எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.

கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்:

1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய். இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது இரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இரத்த தானம் செய்பவர் பெண் எனின் மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் இரத்த தானம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top