Close
நவம்பர் 22, 2024 1:53 காலை

புத்தகம் அறிவோம்… மகாத்மாகாந்தியின் ஓர் உலகம்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

மனித சமுதாயத்திற்கே சேவை செய்ய விரும்புபவர்கள் , மிக எளிதான சிறப்பான முறையில் தங்களின் அருகாமையில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் அதனைச் செய்ய முடியும்.அதே நேரத்தில் தொலைவில் உள்ளவர்கள் பாதிக்கும்படியான சேவையை செய்யாமல் இருக்க வேண்டும். இப்படி ஒரு ஒரு சேவை புரிந்தால், மனித சமுதாயத்தை ஒரு குடும்பமாகக் கருதவில்லை என்றே பொருள்.

மனிதர்களின் சேவை உலகலாவியதாக இருக்க வேண்டும் என்றார் காந்தியடிகள். இப்படிச் செய்தால் ஒருவரைக் கூடத் துன்புறுத்த தேவையில்லை. எந்த இடத்தில் வன்முறை இருக்கிறதோ, அங்கே உடனேயோ, பிறகோ பொய்மை புகுந்துவிடும்.

எனவே அகிம்சை முறையில் அல்லாமல் எந்த ஒருவராலும் தன் அருகில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய முடியாது. பகவான் கிருஷ்ணர் ஒரு யோகி. அவர் கூட மகாபாரதப் போரின்போது, போரின் அழுத்தத்தால், தான் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று தான் செய்த சத்தியத்தைவிட்டுவிட நேர்ந்தது.

மனிதர்கள் தங்களை ஒரு குடும்பத்தினராகக் கருதிவிட்டால், உயிர்ப் பலிகொள்ளும் போர்முறையில் ஈடுபட முடியாது. ஒரு நல்ல புரிதல், விட்டுக் கொடுத்தல், சத்தியம், நீதி,நியாயம் போன்றவைகளுக்கு தீங்கு ஏற்படாது அவர்களின் சிக்கல் களைப் சமரசமாகத்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்படியிருந்தும் மோதலை தவிர்க்க முடியாது என்ற சுழ்நிலையில் காந்தியடிகள் சத்தியாகிரகத்தைப் பயன்படுத்தலாம் என்கிறார்.அகிம்சைப் போரில் அல்லது ஒத்துழையாமைப்போரில் எந்தத் தரப்புக்குமே தோல்வி என்பது இருக்காது என்று காந்தியடிகள் நம்பினார். எந்த தரப்புக்குமே தோல்வியினால் ஏற்படும் அவமானம் என்பதும் ஏற்படாது என்றார். – ஜே.பி.கிருபானி எழுதிய கட்டுரையில்.
(பக்.29).

செய்யாறு சிப்காட் நிலமெடுப்பு விவகாரம், மணிப்பூர் பிரச்சினை,உக்ரைன், பாலஸ்தீன போர்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் காந்திஜி விரும்பிய உலகத்தைப் பற்றி அனைவரும் அறியவேண்டும்.

காந்திஜி விரும்பிய உலகம் உருவானால் இந்த பிரச்னைக ளுக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடும். அப்படி எப்படிப்பட்ட உலகத்தை விரும்பினார்? அதற்கான விடையை 7 அறிஞர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள்.மகாத்மா காந்தியின் ஓர் உலகம்” நூலில்.

என் நாடு சுதந்திரம் அடைய நான் விரும்புகிறேன். நெடுஞ்சான் கிடையாகக் கிடக்கும் இந்தியாவை நான் விரும்பவில்லை. நான் விரும்பும் இந்தியா சுதந்திரமாகவும், ஞானம் அடைந்ததாகவும் இருக்க வேண்டும்.

அது போன்ற இந்தியா உலக மக்களின் நலனுக்காக தேவை எனில் தன்னையே தியாகம் செய்யா தயாராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்று காந்தி ஒரு முறை கூறியதாக ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

உலக அமைதியும், ஓர் உலகம் என்ற ஒன்றும் காந்தியக் கொள்கையில் அவருடைய வாழ்வியலும் பொதிந்திருக் கின்றன.ஜாதி, மத, பால் வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று, சமூக ரீதியில் ஆண், பெண் என அனைவருக்கும் சமமான சந்தர்ப்பங்களைக் கொடுத்தே ஆக வேண்டும்.

அனைவரும் சமமாக, அனைவரின் மரியாதையை உயர்த்திப் பிடித்தபடி ஆன்ம வளர்ச்சிக்காக ஒருவருக் கொருவர் உதவி செய்யும் உலகத்தைத்தான் காந்தியடிகள் விரும்பினார் “என்கிறார் காந்தியவாதி ஆர்.ஆர். திவாகர்.

காந்தியின் உலகத்திற்கு எல்லை கிடையாது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சங்கப்பாடலில் உள்ளதையும், “வாசு தெய்வ குடும்பகம்” என்று வேதங்களில- உலகம் ஒரேயொரு குடும்பம் என்று து சொல்வதையும் காந்தி ஏற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட உலகத்தில் சுயநலம் இருக்காது. ஒருவரை ஒருவரை ஒருவர் நேசிப்பர். அமைதியும் சாந்தமும் நிலவும். இன்றைக்கு அவசியம் தேவை காந்தி விரும்பிய ஓர் உலகம்.

இந்த நூலை உலகத் தலைவர்கள் ஒவ்வொரும் வாசிக்க வேண்டும்.நல்ல மொழியாக்கம்.பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் வெளியீடு.ரூ.80 / .

# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top