Close
நவம்பர் 24, 2024 12:33 மணி

மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்யக் கோரி சிஐடியு தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சிஐடியு தொழில் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7-ல் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்துசெய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கேர்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜகுபரலி, ஏ.முகமதுகனி, கே.சாந்தார் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர்,

மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், அனைத்துப் போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன், ஆட்டோ சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் க.ரெத்தினவேல், எம்.அப்பாஸ் உள்ளிட்டோர் பேசினர்.

நவம்பர் 7-ல் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்துசெய்ய வேண்டும். பழைய பயணிகள் வாகனம் மற்றும் சரக்கு வாகனத்திற்கான சாலை வரியை காலண்டு வரியாக செலுத்துவதற்கு உத்தரவிட வேண்டும். ஆயுள் வரியை ரத்துசெய்ய வேண்டும். மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெறவேண்டும்.

டோல்கேட் கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். இன்சூரன்ஸ், ஒலி பிரதிபலிப்பான் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இணையவழிச் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top