Close
அக்டோபர் 6, 2024 12:31 மணி

மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற் காகவே இலவச மிதிவண்டிகள் வழங்கல்: அமைச்சர் உதயநிதி

சென்னை

சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் சென்னை மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சயில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மாணவர்களின் வருகையை அதிகரிப்பதுதான் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இலவச மிதிவண்டிகளை தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் வருகையை அதிகரிப்பதுதான் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்னையில் தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார..

அப்போது அமைச்சர் உதயநிதி பேசியது, நடப்பு கல்வியாண்டில் தமிழக முழுவதும் சுமார் ரூ. 246 கோடி மதிப்பீட்டில் சுமார் 5.70 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது.

வசதியற்ற மாணவர்கள் பள்ளிக்கு நடந்தோ அல்லது பேருந்திலோதான் வருகை தர வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இலவச மிதிவண்டி வழங்கப்படும் திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஒரு மிதிவண்டியை தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளனர்.

மாணவர்களின் வருகையை அதிகரிக்கும் நோக்கில்தான் இத்திட்டம் திறம்படச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் படித்தவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இதர மாநிலங்களில் சுமார் 27 சதவீதமாக உளள நிலையில் தமிழகத்தில் சுமார் 50 சதவீதமாக உள்ளது. இதனை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள். ராஜகண்ணப்பன், பி.கே. சேகர்பாபு, செஞ்சி மஸ்தான். சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி. ஆர்.கே.நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர். மாவட்ட செயலாளர் இளையஅருணா. மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன். பகுதி செயலா ளர்கள் ஜெபதாஸ் பாண்டியன். லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top