Close
ஏப்ரல் 4, 2025 12:51 மணி

மாநில போட்டிக்குத்தேர்வான தட்டாமனைப்பட்டி பள்ளி மாணவன்..!

புதுக்கோட்டை

குண்டு எறிதலில் மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்ற தட்டாமனைப்பட்டி நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் கே.மருதவேலை வாழ்த்தும் ஆசிரியர் ஸ்டாலின் சரவணன் உள்ளிட்டோர்

புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட‌ கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய தட்டாமனைப்பட்டி நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் கே.மருதவேல், குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டிக்குத் தேர்வாகி உள்ளார்.

புதுக்கோட்டை
மாணவர் மருதவேல்

மேலும் நீளம் தாண்டுதல்,100 மீ ஓட்டப்பந்தயம் போட்டிகளில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று உள்ளார்.

மாணவன் கே.மருதவேலைஸ பள்ளி ஆசிரியர்கள் ஸ்டாலின் சரவணன், ராதிகா, மரியசிபிலா,வினோதா, ப்ரியதர்சினி, ஜெயஷீலா மற்றும் பள்ளி மாணவகுழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top