Close
நவம்பர் 22, 2024 3:49 காலை

குளிரோ.. குளிர்… இங்கிலாந்திலிருந்து சங்கர்…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

குளிரோ குளிர்

இங்கிலாந்தில் குளிர்காலம் தற்போது. இன்னும் பனிப்பொழிவு ஆரம்பிக்கவில்லை என்றாலும், உறைபனி சாலைகளிலும், வாகனங்களிலும் படிய தொடங்கிவிட்டது.

உடலில் படிந்த பனியை தட்டிக்கொண்டே, என்றோ படித்த + மூளைக்குள் படிந்த, பனிக்கு பின்னால் இருக்கும் அறிவியலை இன்று தூசி தட்டினேன்.

நிறமற்ற தண்ணீர் உறைய உருவாகும் பனி ஏன் வெள்ளை யாக இருக்கிறது என்று யோசித்தது உண்டு. ஒளி நிகழ்த்தும் வித்தை தான், ஒளியின் உதவியால் தான் சாத்தியமாகிறது,
ஒளி ஏதோ ஒரு ஆதார மையத்தில் இருந்து உமிழப்பட்டு, அந்தப் பொருளின் மீது விழுகிறது.

பிரதிபலிக்கும் அந்த ஒளி தான், அந்த பொருளை நம் கண்கள் காண உதவி புரிகிறது. சுத்தமான தண்ணீர் நிறமற்றது, அதில் சேர்ந்திருக்கும் மாசு மற்றும் அழுக்கு தான், தண்ணீரை குறிப்பிட்ட நிறமுடையதாக மாற்றுகிறது.

எனவே, ஒளி அதன் ஊடாக செல்வது தான், தண்ணீரை அந்த நிறமுடையதாக நம்மை காண வைக்கிறது. அனைத்தும் அணுக்களால் ஆனது என்பது நாம் அறிந்தது. அந்த அணுக்களால் சேர்ந்தவை தான் மூலக்கூறுகள். அந்த மூலக்கூறுகள் ஒன்றாக சேர்ந்து தான், ஒரு பொருளை நம் கண்கள் காணும் அளவிற்கு அதன் இருப்பை உறுதிப்படுத்துகிறது.

திடப் பொருட்களை விட திரவப்பொருட்களில் இருக்கும் அணுக்களின் பிணைப்பு சற்று வலுவற்றதாக இருக்கும், இந்த இயற்பியல் பண்பு தான் ஒளி அதன் ஊடாக பயணிக்க வைக்கிறது.திடப் பொருட்களின் ஊடாக ஒளி பயணிக்க முடியாது, அதனால் ஒளி அந்த பொருளின் மீது பட்டு பிரதிபலிக்க மட்டுமே செய்யும்.

தண்ணீர் உறைவதனால் அது பனிக்கட்டியாக மாறுகிறது, அந்த பனிக்கட்டி திடப்பொருள் தான் என்றாலும், அது ஒளியையும் சிறிதளவு ஊடாக பயணிக்க வைத்து ஒளி விலகலை ஏற்படுத்துகிறது.ஆனால், பனி என்பது சிறு சிறு நீர்த்துளிகள் அல்லது நீர்த்திவலைகள் உறைவதன் மூலம், பனியாக மாறி நிலத்தில் விழுகிறது. அது பனிக்கட்டியை விட வெள்ளையாக இருக்கிறது.

அதற்கு காரணம் பனி என்பது சிறு சிறு படிகங்களாய் ஒழுங்கற்ற வடிவங்களாய் உருவாக்கப்பட்ட கூட்டுத்தொகுப்பு.
ஒளியானது அந்த படிகங்களாய் இருக்கும் பனி மீது பட்டு பிரதிபலிக்கும், பிரதிபலித்த ஒளி அருகருகே இருக்கும் பனிப் படிகங்கள் மீது விழும். மீண்டும் மீண்டும் ஒளியானது பனிப் படிகங்கள் மீது பட்டு பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்.

அது மட்டுமல்லாமல், பனி என்பது ஒழுங்கற்ற உருவாய் இருப்பதால்,ஒளி பிரதிபலிப்பதோடு, ஒளி விலகவும் செய்கிறது. மற்றொரு காரணம், ஒளி திரும்பத் திரும்ப ஒரே இடத்தின் மீது பட்டு பிரதிபலிப்பதால், அது வெள்ளையாக நம் கண்களுக்கு புலப்படுகிறது.

வெள்ளை என்பது அனைத்து வண்ணங்களையும் பிரதி பலிக்கும், கருப்பு அனைத்து வண்ணங்களையும் உள்வாங்கிக் கொள்ளும் என்கிற கோட்பாட்டை நினைவில் கொள்வோம் எனில் மேற்கூறிய பதிவு எளிதாக விளங்கும்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top