Close
அக்டோபர் 5, 2024 10:03 மணி

விராலிமலையில் மையம்- வானவில் மைய கட்டிடம் திறப்பு

புதுக்கோட்டை

விராலிமலை அருகே வானவில் கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரம், வடுகப்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின வள மையக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற விழாவில்,  நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி  குத்துவிளக்கேற்றி பாலின வள மையம்- வானவில் மைய கட்டிடத்தினை,சட்டம்,  திறந்து வைத்து, பாலின வன்முறை தவிர்த்தலுக்கான பிரச்சார உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு, பயனாளி களுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் நிதியுத வித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

பின்னர்  சட்டத்துறை  அமைச்சர்  ரகுபதி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுமக்களின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் பொதுமக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் விராலிமலை வட்டாரம், வடுகப்பட்டி ஊராட்சியில், பாலின வள மையம்- வானவில் மைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, அனைத்து மாவட்டங்களிலும் ஒரு புசுஊ மையம் ஆரம்பித்தல் என்பது அரசு அறிவிப்பில் ஒரு முக்கியமான அங்கமாக உள்ளது.

வட்டாரம் மற்றும் ஊராட்சி அமைப்புகள் மூலம் முதன்மையான பாலின பாகுபாடு பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அங்கீகரித்து, தீர்வு காண்பதற்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் பெண்களின் நிலை மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும் அடிப்படையில் செயல்படுவதே பாலின வள மையத்தின் நோக்கமாகும்.

விராலிமலையில் அதிகளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஏற்படுவதாலும், அவ்வாறு ஏற்படும் கொடுமைகள் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டும் வருகிறது. மேலும் பெண்களுக்கு இளம் வயதில் திருமணம், சிறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, குடும்பத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், 14 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்- குழந்தைகள் பாலின தொல்லைகள் போன்றவைகள் ஏற்படுவதை தடுப்பதே ஆகும்.

கிராம புறங்களில் உள்ள பொது இடங்களில் நடக்கும் பிரச்சனைகள் பற்றிய தகவல்களை சமூகநலத்துறை மூலமாகவும் பாலின வள மையம்- வானவில் மையத்திற்கு தெரியப்படுதலாம். மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஏற்படின், அவர்களை அழைத்து வந்து பாலின வள மையம்- வானவில் மையத்தில் குறுகிய காலம் தங்க வைத்து அவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாகவும் மற்றும் பிரச்னைகள் பற்றிய முழுவிவரங்களை கேட்டு அறிந்தும் அதற்கான தீர்வு காண  தேவையான ஆலோசனைகளை வழங்கி திரும்ப அவர்களின் குடும்பத்திற்கு அனுப்பி வைத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்வதே இம்மையத்தின் பணியாகும்.

மேலும், மாவட்டம் முழுவதும் பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி வாசிப்பு, மெழுகுவர்த்தி ஏந்துதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு வருடங்களாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை ஊராட்சிகள் மற்றும் வட்டாரங்கள் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பெற்று தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

பின்னர் பாலின வன்முறை தவிர்த்தலுக்கான பிரச்சார உறுதிமொழியான, ‘நமது சொல்லாலும், செயலாலும் எந்த ஒரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிப்பு நேராத வகையில் நடந்து கொள்வோம். நமது கவனத்திற்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவோம். அத்துடன் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். நமது கிராமங்களில் குழந்தைத் திருமணம் நடைபெறா வண்ணம் விழிப்புடன் இருப்போம். குழந்தை திருமண ஏற்பாடு குறித்து தெரிய வந்தால் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உடனே தடுத்து நிறுத்துவோம்.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பாலின சமத்துவ மன்றத்தின் மூலம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். எந்த ஒரு பெண்ணுக்கு குடும்ப வன்முறை நிகழ்ந்தாலும் உடனடியாக 1091, 181 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உரிய ஆலோசனை பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருப்போம். பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, குழந்தை திருமணம் உள்ளிட்ட பாலின அடிப்படையிலான வன்முறை எந்த வடிவில் நிகழ்ந்தாலும் பாரபட்சமின்றி குரல் கொடுத்து உரிய தீர்வு பெற்றுத் தர உடனிருப்போம்” என்ற உறுதி மொழியினை,   அமைச்சர் .எஸ்.ரகுபதி அவர்கள்; வாசிக்க அதனை பின்தொடர்ந்து, அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர்.தெய்வநாயகி, உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராமன், சர்மிளா, ராஜாமுகமது, சசிக்குமார், .மகாதேவி, ஒன்றிய குழு உறுப்பினர்மு.பி.ம.சத்தியசீலன், வட்டாட்சியர் கருப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர்  சுவாமிநாதன், ஊராட்சிமன்றத் தலைவர் .ஜெயலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top