Close
நவம்பர் 21, 2024 11:46 மணி

புத்தகம் அறிவோம்… என் கதை…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்... என் கதை.. கமலாதாஸ்

ஒரு காலத்தில் வரவேற்புகள் நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு பெரிய கட்டிடத்தைப் போன்றிருந்தது என் உடல். நடனக் கலைஞர்கள் நடனமாடினார்கள். இசைக்கலைஞர்கள் இசை பாடினார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் மரியாதைக் குரியவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் நல் விவரங்களை பேசினார்கள். இறுதியில் கட்டடம் இடிந்த போது (நோயுற்றபோது) சேரிவாசிகள் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் (நோய்களுடன்) வந்து குடியேறி னார்கள்.

ஒவ்வொரு காலடியைப் பதிக்கும் போதும் அவர்கள் மன்னிப்புக் கோரினார்கள்’ நாங்கள் இங்கே வந்திருக்கக் கூடாது. ஒரு காலத்தில் சுகங்கள் மட்டுமே செழித்து வளர்ந்திருந்த உடலை நோக்கி, இரவு வேளைகளில் சேரி வாசிகளப்போல வேதனைகள் குடியேறின. அவர்கள் தாம் புதிய நிரந்த குடியிருப்புவாசிகள். தாங்கள் நிரந்தரமாக வசிக்கவே இங்கு வந்திருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியும்.

வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் உலகத்தில் ஒரு காலையும் இறந்தவர்களின் உலகத்தில் அடுத்த காலையும் வைப்பது என்பதே ஒரு மனிதன் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய நிலைப்பாடு. அப்போது அவன் சமநிலையை எய்துகிறான்.

அப்போது அகப்பார்வை வெகு ஆழத்தை எட்டுகிறது. அஞ்சு வதற்கு அதுவுமில்லை. தேர்ந்தெடுப்பதற்கான உரிமை அவனுடையது. முயற்சித்தால் விரும்பும் இடத்தை நோக்கி அவன் நகர இயலும். ஆனால் இரண்டு உலகங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினம்.

எனக்கு வேறு வழி இருக்குமென்றால் நிழல்களின் புலப்படாத வேறொரு உலகமோ ஒரு சந்திர உலகமோ அத்தகைய ஏதோ ஓரிடம் இருக்குமென்றால் நான் இப்போது அங்கு போயிருப் பேன். மற்ற இரண்டு உலகங்களும் வாழ்பவர்களுக்குரியது. இறந்தவர்களுக்குரியது – அழியட்டும் அழிந்து போகட்டும்.
-கமலாதாஸ் ‘என் கதை’யின் முன்னுரையில்.(பக்.30).

புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் (மாதவிக்குட்டி) தன் நாற்பது வயது முடிவதற்கு முன்பாக, மலையாளத்தில், ‘மலையாள நாடு’ வார இதழில் எழுதிய
‘தன் வரலாற்றின் ‘தமிழ் வடிவம்தான்” என் கதை”.

நான் முதலில் வாசித்தது ‘குமுதம் ‘வார இதழில் தொடராக வந்தபோது. தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை உள்ளது உள்ளபடி பேசும் நூல். என் கதை, முதலில் வெளிவந்த நாற்பது ஆண்டுகளுக்குப் பின் 2019ல் ” காலச்சுவடு” பதிப்பகத்தால் மறுபதிப்பு கண்டுள்ளது.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை-புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top