Close
நவம்பர் 22, 2024 1:49 காலை

எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் எண்ணெய் கழிவுகள் வெளியேறியிருக்கலாம்: சிபிசிஎல்

சென்னை

எண்ணெய் கழிவுகளை அகற்றும் சென்னை சிபிசிஎல் ஊழியர்கள்

எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் எண்ணெய் கழிவுகள் வெளியேறியிருக்கலாம் என சிபிசிஎல் நிறுவனம் தகவல்.

ஆறு மற்றும் ஏரிகளில் அதிக அளவு ஒவ்வொரு நீர் திறக்கப் பட்டதால் எதிர்பாராத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆலையில் தேங்கி இருந்த கழிவு எண்ணெய்க் கழிவுகள் வெளியேறி இருக்கலாம் என சென்னை எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த டிசம்பர் 4 -ஆம் தேதி பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து சுமார் 48 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப் பட்டது.  இதன் காரணமாக மணலி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிபிசிஎல் ஆலை உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கனரக ஆலைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.
இதுகுறித்து மாநில நிர்வாகத்திற்கு சிபிசிஎல் நிறுவனம் சார்பில் தகவல் மற்றும் வேண்டுகோள் அனுப்பப்பட்டது.  இதில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை,  சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் வெள்ளப் பெருக்கால் அளவுக்கு அதிகமாக நீர் வந்து கொண்டிருப்பதால் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 இவ்வாறு அளவுக்கு அதிகமான ஏரிகளில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பக்கிங்காம் கால்வாயில் எதிர் திசையில் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சிபிசிஎல் நிறுவனத்திற்குள் எதிர்பாராத வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது.
இதில் ஆலை வளாகத்திற்குள் ஆங்காங்கு தேங்கி இருந்த எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய் வழியாக வெளியேறிருக் கலாம்.  மேலும் இதே பகுதியில் அமைந்துள்ள மற்ற மற்ற ஆலைகளில் இருந்தும் இதேபோன்று கழிவு ஆயில்கள் எண்ணெய்கள் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என நம்புகிறோம்.
 தற்போது பக்கிங்காம் கால்வாய் மற்றும் எண்ணூர் முகத் துவாரப் பகுதியில் தேங்கியுள்ள கழிவு எண்ணெய்களை அகற்றும் பணியில் சிபிசிஎல் நிர்வாகம் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.  எண்ணெய் படலங்களை அகற்ற சுமார்  20 ஆயிரம் எண்ணெயை உறிஞ்சும் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1430 மீட்டர் நீளம் கொண்ட எண்ணெய் உறிஞ்சும் தடுப்பான் கள் பக்கிங்காம் கால்வாய் , முகத்துவாரப் பகுதியில் போடப்பட்டுள்ளன. 110 படகுகள், 440 பணியாளர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்களுக்கு 600 கையுறைகள், ஆயிரம் முகக்கவசங்கள்,  750 காலணிகள், 500 தலைக் கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பொது மக்களுக்கு நிவாரணமாக 11 ஆயிரம் அரிசி பைகள்,  6000 மளிகை சாமான்பைகள்,  3000 சேலைகள்,  தலா 2 ஆயிரம் வேட்டிகள், பெண்களுக்கான ஆடைகள்,   போர்வை கள் உள்ளிட்டவைகள் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top