Close
நவம்பர் 24, 2024 11:09 காலை

புத்தகம் அறிவோம்… ஆன்மா என்னும் புத்தகம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவேம்-ஆன்மா என்னும் நூல்

காந்தி 10.

+ மனிதத்தில் நீங்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது. மனிதம் என்பது பெருங்கடலைப் போன்றது. அதில் சில துளிகள் அசுத்தமாக இருப்பதால், முழுக்கடலும் அசுத்தமாகிவிடாது.

+ ஒரு மனிதன் அவனின் எண்ணங்களின் தொகுப்பே. அவன் எதுவாக நினைக்கிறானோ, அதுவாகவே ஆகிறான்.

+ உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் காயப்படுத்திவிட முடியாது.

+ ஒரு கோழையால் அன்பை வெளிப்படுத்திவிட முடியாது. அது துணிச்சலானவர்களின் தனிச்சிறப்பு.

+ மனிதன் தேவைகளை நிறைவேற்றப் போதுமானவை இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் மனிதனின் பேராசைக்கு அல்ல.

+ வலிமை என்பது உடல் திறனால் உருவாவதில்லை. அது வெல்லமுடியாத மனத்தின்மையிலிருந்து உருவாகிறது.

+ என் மதம் உண்மை, அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மைதான் என் இறைவன்.அவரை உணர்வதற்கான வழிதான் அகிம்சை.

+பலவீனமானவர்களால் எப்போதும் மன்னிக்க முடியாது. மன்னிக்கும் பண்பு பலசாலிகளுக்கானது.

+ சகிப்பின்மை என்பதே வன்முறையின் ஒரு வடிவம்தான்.அது உண்மையான ஜனநாயக உணர்வின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது.

+ஒவ்வொருவரும் அவரவருக்கான உண்மையை அவருக்குள்தான் தேட வேண்டும். அந்த அமைதி புறச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் வேண்டும்.

காந்தியின் “சத்திய சோதனை” சொல்லும் செய்தியாக “ஆன்மா என்னும் புத்தகம் ” ஆசிரியர் என்.கெளரி எழுதியுள்ள 10  உண்மைகள்(பக்.88).

“ஆன்மா என்னும் புத்தகம்” இதே தலைப்பில் இந்து தமிழ் திசை நாளிதழ் ஆனந்த ஜோதி இணைப்பில் வந்த 30 கட்டுரைகளின் தொகுப்பு. 30 நூல்களின் அறிமுகம்.

ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் “Think on These Things ”
மகாத்மா காந்தியின் “சத்திய சோதனை” ,
சீனாவின்
“தாவோயிசம் ”
மற்றும்
புத்த சமயம்,
ஜென் புத்தசமயம்
இஸ்லாம் இவைகளைப் பற்றிப் பேசும் 30 நூல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் சாரத்தை நமக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர் கெளரி.
இதில் உள்ள நூல்கள் ஆன்மீகத்தேடலுக்கானது மட்டுமல்ல, உயர்ந்த வாழ்க்கையை அடைவதற்கான வழிகளையும் சொல்கிறது.

“குழப்பங்கள், வன்முறை, வக்கிரங்கள், மனம் பிறழ்ந்த ஆவேசங்கள் இவையெல்லாம் தினசரி வாழ்க்கை முறையாகப் போய்விட்டிருக்கும் இன்றைய உலகில், மனித மனத்தைப் பீடித்திருக்கும் பித்துப் பிடித்த நிலை மாற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இந்த நூல் நல்லதொரு வழிகாட்டிக் குறிப்பேடாக விளங்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது” என்கிறார் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள கவிஞர் ஆனந்த் கிருஷ்ணா. இந்து தமிழ் திசை வெளியீடு. ரூ 130.

# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top