Close
செப்டம்பர் 19, 2024 7:12 மணி

மும்பை கொல்கத்தாவுக்கு பறக்கும் தேனி இளநீர்..!

தேனி

தேனியிலிருந்து வட மாநிலங்கள் செல்லும் இளநீர்

தேனி மாவட்டத்தில் இருந்து மும்பை, கொல்கத்தா உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் சராசரியாக 100 டன் இளநீர் கொண்டு செல்லப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தவிர பல ஆயிரம் செவ்விளநீர் மரங்களும் உள்ளன. தற்போது தேங்காய் விலை குறைவு. எனவே புதிதாக தென்னை மரங்களை சாகுபடி செய்பவர்கள் இளநீருக்கு உதவும் மரங்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர்.

செவ்விளநீர், பச்சை இளநீர் இரண்டுக்குமே மும்பை, கொல்கத்தா, புதுடில்லி, அகலகாபாத் உள்ளிட்ட வடமாநில நகரங்களில் பெரும் வரவேற்பு  உள்ளது. குறைந்தபட்சம் சீசன் நேரங்களில் குறைந்தது 10 லாரிகள் அதாவது ஒரு லாரிக்கு 10 டன் வீதம், 100 டன் இளநீர் தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. சில லாரிகளில் 15 டன் இளநீரும் கொண்டு செல்லப்படுகிறது. சாதாரண நேரங்களில் கூட குறைந்தபட்சம் தினமும் 60 டன் இளநீர் கொண்டு செல்லப் படுகிறது.

இவர்கள் விவசாயிகளுக்கு தோட்டத்தில் நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். குறைந்தபட்சம் 25 ரூபாய் வரை ஒரு இளநீருக்கு விவசாயிகளுக்கு விலை கொடுப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர தேனியில் இருந்து தினமும் பல டன் கருவேப்பிலை, காய்கறிகளும் கொண்டு செல்லப்படுகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top