Close
நவம்பர் 22, 2024 12:05 காலை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட மையத்தில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

புதுக்கோட்டை

புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை புதுக்கோட்டை மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கந்தர்வக்கோட்டை ஒன்றியம், அரியாணிப்பட்டி புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை புதுக்கோட்டை மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்கள் செயல்பட்டு வருகிறது.

அதில் அரியாணிப்பட்டி புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா  ஆய்வு செய்து, கற்போரிடம் பெயர் எழுதுதல், எண்கள் எழுதுதல், பொருள்களுக்கு ஏற்ப எண்களை எண்ணி சொல்லுதல், எளிய கூட்டல் செய்தல் போன்றவற்றில் அடைவு சோதித்து ஊக்குவித்தார்.

மேலும் கற்போரிடம் வாழ்வியல் திறன் சார்ந்த கருத்துக்களில் கூடுதல் பயிற்சி பெற்றிட ஆர்வமூட்டி மார்ச் மாதத்தில் நடைபெறும் அடைவுத்திறன் மதிப்பீட்டில் அனைவரும் சிறப்பாக செயல்பட தினசரி வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள ஊக்குவித்து மையத்தில் பயிற்சி வழங்கிவரும் தன்னார்வலர் ஹேமாவிடம் பயிற்சி புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் முழுமையாக கற்றுத்தர வலியுறுத்தி ஊக்கப்படுத்தினார்.

ஆய்வின் போது வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ்குமார், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா ஆகியோர் உடனிருந்தனர். மையத்தில் 17 கற்போர்கள் பயிற்சி பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top