Close
நவம்பர் 21, 2024 10:51 மணி

மின்னாற்றல் – மின் சிக்கனம், மின் பாதுகாப்பு – குறித்த ஆற்றல் மன்ற விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

புதுக்கோட்டை

பள்ளிகளில் மின்சார வாரியம் மூலம் நடத்தப்பட்ட ஆற்றல் மன்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு

மின்னாற்றல் – மின் சிக்கனம், மின் பாதுகாப்பு – குறித்த ஆற்றல் மன்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டை மாவட்ட அரசு உயர் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மின்சார வாரியம் மூலம் நடத்தப்பட்ட ஆற்றல் மன்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசளிக்கும் நிகழ்வு புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் கோ.சேகர் தலைமையில் நடைபெற்றது.

மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர் வை ஏற்படுத்தும் ஆற்றல் மன்றங்கள் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது.

இவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏற்கெனவே பள்ளிகளில் ஆற்றல் மன்றங்களில் செயல்படும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட் டன. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று, வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கி பாராட்டப்பட்டது.

இதில் பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன், சுற்றுச்சூழல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை.செந்தில், அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் (பொது) மா.முருகேசன், செயற் பொறியாளர்கள் ஆ.முருகன், ஜான் பீட்டர், செல்வகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மங்கள நாடு கிழக்கு, மற்றும் அம்புக்கோயில் உயர்நிலைப் பள்ளிகளும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புத்தாம்பூர் மேல்நிலைப்பள்ளி, திருவரங்குளம் மேல்நிலைப்பள்ளி,

குளவாய்ப்பட்டி மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோவில் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 பள்ளிகளில் இருந்து 18 குழுவாக ஏற்கெனவே மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்த ஆற்றல் மன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் வீரமுத்து வரவேற்றார். நிறைவாக அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top