Close
நவம்பர் 21, 2024 2:27 மணி

புத்தகம் அறிவோம்.. எதிரி உங்கள் நண்பன்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- எதிர் உங்கள் நண்பன்

புனிதனாக …

நேர்மை அனைத்து நிறைவுகளையும் ஒன்றிணைப்பது; மகிழ்ச்சியின் மையமும் அதுவே. அது ஒரு மனிதனை, செயலறிவும் முன்யோசனை கொண்டவனாக, அறிவார்ந் தவனாக, புத்திசாலியாக, துணிச்சல்காரனாக, நேர்மையாள னாக மாற்றுகிறது. ஒட்டுமொத்தமாக அவனை ஒரு வழிபடத் தக்க கதாநாயகனாக்குகிறது.

மூன்று விஷயங்களில் ஒரு மனிதனை ஆசிர்வாதிக்கப்பட்ட வனாக மாற்றுகிறது. புனிதனாயிருப்பது, வழுவற்றிருப்பது, அறிஞனாயிருப்பது ஆகியவையே அம்மூன்று விஷயங்கள். மானுடம் என்ற சிறு உலகத்தின் சூரியன் நேர்மை. அதன் அரைக்கோலமானது மனச்சாட்சி; அன்பினும் பெரியது ஒழுக்கம்.

அதைப்போல வெறுப்பினும் மோசமானது தீயொழுக்கம். ஒழுக்கமே உண்மை; மற்றது எல்லாம் வேடிக்கைப் பேச்சு தான். திறமையும் மாட்சியும் ஒழுக்கத் தால் அறியப்படும். நல்வளத்தால் அல்ல. ஒழுக்கமே சுய நிறைவுடையது. உயிருடன் இருக்கும்போது ஒழுக்கத்தால் ஒருவர் நேசிக்கப்படுகிறார்; இறந்தபின் நினைவுகூறப் படுகிறார்.(பக்.8).

பின்வாங்கத் தெரிந்துகொள்.

ஒன்றை மறுப்பது எப்படி என்று தெரிந்துகொள்வது உன் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பாடம். இதைவிட மிகப்பெரிய பாடம் உன்னை நீயே விலக்கிக்கொள்வது. உனது வியாபாரத்திலும், சில பெரிய மனிதர்களிடமும் ‘இல்லை’ என்று மறுக்கும் கலை ஆகப்பெரியது. நீ செயலற்று சும்மா இருக்கலாம்; உனக்கு தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுவதைவிட தொடர்பற்ற அயலான காரியங்கள் உனது மதிப்புமிக்க நேரத்தைத் தின்றுவிடும்.(பக்.16).

“எதிரி உங்கள் நண்பன்”,  08.01.1601ல் பிறந்து 06.12.1658  ல்  மறைந்த, தனது எழுத்துக்காக நாடுகடத்தப்பட்டஸ்பெயின்  தேசத்து சாணக்கியன் பால் தசார் கிராசியன் எழுதிய 300 மூதுரைகள் கொண்ட நூல். The art of Worldly Wisdoms என்ற தலைப்பில் ஜோசப் ஜேக்கப் என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.வின்ஸ்டன் சர்ச்சில் போன்றவர் களால் விரும்பி வாசிக்கப்பட்ட நூல் இது.

“தினசரி வாழ்வில் நமது செயல்களை வரைமுறைப்படுத்திக் கொள்ளவும், எதிர்வரும் மனிதர்களை சாமர்த்தியமாக கையாளவும், நமது அகவெற்றிக்கும் புற வெற்றிக்கும் நம்மை நாமே வடிவமைத்துக் கொள்ளவும் சில தீர்க்கதரிசனங்களை இந்நூல் முன் வைக்கிறது என்கிறார் தமிழ் மொழி பெயர்ப்பாளர் சந்தியா நடராஜன்.

300 மூதுரைகளில் 104 தேர்ந்தெடுக்கப்பட்ட மூதுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

இதோ மேலும் சில மூதுரை தலைப்புகள்.

நீங்கள் ஒரு புதிராகவே இருங்கள்.

நாட்டின் குறைபாடுகளை மறைத்துவிடு.

உங்களுக்கு கற்பிக்கக் கூடியவர்களிடம் உறவாடுங்கள்.

உனது செயல்முறையை மாற்றிக்கொண்டிரு.

எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடி.

ஒரு போதும் சமநிலை இழக்காதீர்.

மறுக்கத் தெரிந்து கொள்

மழுப்பத் தெரிந்து கொள்.

கேட்கப்படும் வரை மன்னிப்பு கேட்காதீர்.

அவதூறுகளைத் தவிர்.

உனது நடத்தை உன்னத மாயிருக்கட்டும்.

நீங்கள் கையாளும் மனிதர்களின் மனநிலைக்கு உடன்படு.

நடைமுறைக்கு ஏற்ப வாழ்

பிடிவாதத்தால் மோசமான அணியை ஆதரிக்காதே.

அவசர வாழ்க்கை வேண்டாம்

மக்கள் விரும்புவதை நீ செய்; ஏற்காததை மற்றவர்கள் மூலமாகச் செய்

உன்னை பேதையாய் காட்டிக் கொள்

ஒரு போதும் உறவுகளை முறிக்காதீர்கள்.

மறப்பது எப்படி என்று கற்றுக்கொள்.

எப்போதும் நீ கவனிக்கப்படுவதாக எண்ணி செயல்படு.

அதனை அதன் போக்கில் விடு.

வெளியீடு-சந்தியா பதிப்பகம்-ரூ.80.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top