Close
நவம்பர் 22, 2024 3:21 காலை

ஜனவரி 6 -ல் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16 ஆவது மாவட்ட மாநாடு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடங்கிய சிறப்பு கூட்டம்

புதுக்கோட்டையிலுள்ள 13 ஒன்றியங்களில் இருந்து 500 பேரை திரட்டி அறிவியல் விழிப்புணர்வு பேரணி நடத்துவது என அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடங்கிய சிறப்பு கூட்டம் மாவட்ட தலைவர் ம.வீரமுத்து தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைவரையும் வரவேற்று புதுக்கோட்டையில் வரும் ஜனவரி 6 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16 ஆவது மாவட்ட மாநாட்டை ஒட்டி திட்டமிட வேண்டிய பணிகள் குறித்தும்,

ஒன்றியங்களில் இருந்து அறிவியல் இயக்க ஆர்வலர்களை பேரணிக்கு அழைத்து வருவது குறித்தும் இப்பேரணியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு தொடக்கி வைக்க இருப்பது குறித்தும் அதனையொட்டி செய்யப் பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் பேசினார்.

இப்பேரணிக்கு பின்னர் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் பொதுமாநாடு குறித்தும் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் குறித்தும் மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன் பேசினார்.

இந்த ஆலோசனை மற்றும் திட்டமிடல் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒன்றியங்களின் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு அந்தந்த ஒன்றியங்கள் செய்யவிருக்கும் பங்களிப்புகள் குறித்து பேசினர்.

இதில் காலையில் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சிரம்யா தொடக்கி வைக்க உள்ளதாகவும், பேரணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழராஜ வீதி வழியாக நகர் மன்றத்தை சென்றடைவதாகவும், பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ளும் பொதுமாநாடு.

பின்னர் சமூக மாற்றத்தில் அறிவியல் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளதாகவும் இதில் அனைத்து ஒன்றியங்களில் இருந்து அதிகமான நபர்களை பங்கேற்க செய்வதென்றும், பின்னர் நடைபெறும் அறிவியல் இயக்க பிரதி நிதிகள் மாநாட்டில் ஒன்றியத்திலிருந்து தலா 10 நபர்கள் மட்டும் பங்குபெறும் பிரதிநிதிகள் மாநாட்டில் புதிய மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது என்றும் முடிவுகள் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் க.சதாசிவம், பேராசிரியர் ஆர்.பிச்சைமுத்து, கு.துரையரசன், க.ஜெயராம், இரா.ராமதிலகம்,  சி.ஷோபா, ஆ.கமலம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட பொருளாளர் த.விமலா அனைவருக்கும் நன்றி கூறினார்.

அதனைத் தொடர்ந்து அறிவியல் இயக்க புதுக்கோட்டை ஒன்றியம் மற்றும் நகர மாநாடுகள் நடைபெற்றது.ஒன்றிய மாநாட்டில் புதிய தலைவராக த.அமுல்துரை, செயலாளராக சு.தேன்மொழி, பொருளாளராக மா.சத்தியா ஆகியோரும், புதுக்கோட்டை நகர மாநாட்டில் புதிய தலைவராக முனைவர். எம்.மதியழகன், செயலாளராக எஸ்.கஸ்தூரிரங்கன், பொருளாளராக என்.ஜெரினா பேகம், ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களை வாழ்த்தி மாநில செயற்குழு உறுப்பினர் லெ.பிரபாகரன், அறிவியல் இயக்க முன்னோடி இரா.விவேகானந்தன்  உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

இந்நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள் ஆவுடையார்கோயில் செல்வராசு, கந்தர்வகோட்டை ரகமதுல்லா, கறம்பக்குடி சாமி கிரிஷ், குன்றாண்டார்கோயில் ராஜா, அரிமளம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top